முதல் போட்டியில் தோனி இல்லை என்ற செய்தி இணையத்தை கலக்கி வருகிறது ; CSK நிர்வாகம் சொன்னது என்ன ?

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 லீக் தொடர் இன்று மாலை முதல் நடைபெற இருக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இரு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தான் அவரவர் ஹாம் மைதானத்தில் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆனால், முதல் போட்டி (குஜராத் vs சென்னை)-ல் மகேந்திர சிங் தோனிக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆமாம், 41வயதான தோனிக்கு இது இறுதி ஆண்டு ஐபிஎல் போட்டியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் தோனி கேப்டனாக விளையாடுவாரா ? இல்லையா ? CSK நிர்வாகம் அளித்த பதில் என்ன ?

மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார் கேப்டன் தல தோனி. இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் பயிற்சி செய்து கொண்டு இருந்த நேரத்தில் காலில் சுளுக்கு ஏற்பட்டது.

அதனால் முதல் போட்டியில் விளையாட வாய்ப்புகள் இல்லை என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் CSK நிர்வாகம் பதிலளித்துள்ளது.

ஆமாம், அதில் தோனி இப்பொழுது சரியாக தான் இருக்கிறார். அதுமட்டுமின்றி, தோனிக்கு இதை விட பெரிய காயங்கள் ஏற்படும்போது கூட ஓய்வெடுக்காமல் சென்னை அணியில் இணைந்து விளையாடியுள்ளார்.

அதனால், இதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று கூறியுள்ளனர். 41 வயதான தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

அதனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஐபிஎல் தொடரில் இருந்து விலக அதிக வாய்ப்புகள் இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். சென்னை அணியில் தோனி இல்லையென்றால் CSK அணியால் கோப்பையை வெல்ல முடியுமா ?உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTSல் பதிவு செய்யுங்கள்..!