ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆரஞ்சு கேப் வென்ற வீரரே இவர் தான் ; இவரை எப்படி அணியில் இருந்து வெளியேற்றினார்கள் ;

0
Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்களின் பட்டியல்! ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 16ஆவது தொடர் நாளை மறுநாள் (மார்ச் 31) மாலை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

அன்றைய தினம் இரவு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றனர். ஐ.பி.எல். போட்டிகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், முன்னணி வீரர்கள் பலரும் காயங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி வருவது அணி நிர்வாகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மாற்று வீரர்களைத் தேர்வுச் செய்யும் பணிகளில் அணி நிர்வாகிகளும், கேப்டன்களும், அணியின் பயிற்சியாளர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரிலும், அதிக ரன்களைக் குவிக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படும். அந்த வகையில், கடந்த 15 சீசன்களில் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்களின் பட்டியலை விரிவாகப் பார்ப்போம்.

கடந்த 2008- ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஷான் மார்ஷ் ஆரஞ்சு கேப் வென்றுள்ளார். 2009- ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மேத்யூ ஹேடன் ஆரஞ்சு கேப் வென்றுள்ளார். 2010- ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும், 2011, 2012- ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய கிறிஸ் கெயிலும், 2013- ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மைக்கேல் ஹஸ்ஸியும் ஆரஞ்சு கேப் வென்றுள்ளனர்.

2014- ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய ராபின் உத்தப்பாவும், 2015, 2017, 2019- ஆம் ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய டேவின் வார்னரும், 2016- ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய விராட் கோலியும், 2018- ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சனும், 2020- ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடிய கே.எல்.ராகுலும், 2021- ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்டும், 2022- ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ஜோஸ் பட்லரும் ஆரஞ்சு கேப் வென்றுள்ளனர்.

ஆரஞ்சு கேப் அதிகமுறை வென்றவர்களில் டேவிட் வார்னர் முதலிடத்திலும். கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக முறை ஆரஞ்சு கேப் கைப்பற்றிய டேவிட் வார்னரை சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி வெளியேற்றியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here