எனது ஐபிஎல் அணியில் இவர்கள் மூன்று பேர் கண்டிப்பாக இருப்பார்கள் … யார் அந்த மூன்று வீரர்கள் ???
ஐபிஎல் போட்டி என்றாலே அதிரடி வீரரான க்றிஸ் கெய்ல் வீரர் தான் அனைவரின் மனதிலும் தோன்றும். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றில் அவரை போல மிகச்சிறந்த வீரர் யாரும் இல்லை என்பது தான் உண்மை. க்றிஸ் கெய்ல் இந்த ஆண்டு 2021 பாகிஸ்தானில் நடக்கும் ஒரு போட்டியை தலைமைதாங்கி வருகிறார்.
ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் அணியில் இருந்த க்றிஸ் கெய்ல் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் அவரை அணியில் இருந்து நீக்கியது பெங்களூரு அணி. அதன்பிறகு அவரை கிங்ஸ் XI பஞ்சாப் அணி க்றிஸ் கெய்ல் ஏலத்தில் எடுத்து என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் க்றிஸ் கெய்ல் பாகிஸ்தானில் நாடாகும் போட்டியின் பொது ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார் க்றிஸ் கெய்ல். அதில் க்றிஸ் கெய்லுக்கு பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் முக்கியமான கேள்வி ?
ஐபிஎல் போட்டியில் உங்கள் லெவன் அணியில் யார் முதல் மூன்று இடங்களில் வருவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது? நிச்சியமாக இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அவர் மிகச்சிறந்த அதிரடி வீரர் அதுமட்டுமின்றி நல்ல ஒரு நண்பர் என்பதால்.
நேர்மாறாக பதில் அளித்த க்றிஸ் கெய்ல் இந்தியா அணியின் வீரர் ரோஹித் சர்மா, நிக்கோலஸ் பூரான், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகிய மூன்று வீரர்கள் தான் நிச்சயமாக முதல் மூன்று இடங்களில் இருப்பார்கள் என்று பதில் அளித்துள்ளார்.
ரோஹித் சர்மா இதுவரை ஐபிஎல் போட்டியில் மொத்தம் 200 போட்டிகளில் 5230 ரன்களை எடுத்து 130.61 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. நிக்கோலஸ் பூரான் ஐபிஎல் போட்டியில் மொத்தமாக 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி 520 ரன்களை எடுத்து 165.4 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்தவர் ஆண்ட்ரே ரஸ்ஸல் மொத்தமாக 74 போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 1517 ரன்களை எடுத்து 182.3 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இதுவரை இவரை போல் அதிரடியாக பேட்டிங் செய்ய யாரும் இல்லையென்றே சொல்லலாம். இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடி பல போட்டிகளில் அவரது அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிபெற செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.