வீடியோ : என்ன சிம்ரன் இதெல்லாம் ; வாயடைத்து போன கிறிஸ் கெயில் ; பா…! செம விக்கெட் பா…!

0

அனைத்து விதமான போட்டிகளில் இருந்து விளையாடி வரும் வீரர்களுக்காகவே அறிமுகம் ஆன போட்டி தான் லெஜெண்ட் லீக். மார்ச் 10 ஆம் தேதி அன்று தொடங்கியுள்ளது போட்டி.

வெறும் மூன்று அணிகளை (ஆசிய லையன்ஸ், வேர்ல்ட் ஜென்ட்ஸ் மற்றும் இந்திய மஹாராஜாஸ்) கொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை நடைபெற்று முடிந்த போட்டியில் ஷாஹித் அப்ரிடி தலைமையிலான ஆசிய லையன்ஸ் தான் முதல் இடத்தில் இருக்கிறது.

நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான வேர்ல்ட் ஜென்ட்ஸ் அணியும், கவுதம் கம்பிர் தலைமையிலான இந்தியா மஹாராஜாஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற வேர்ல்ட் ஜென்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் வாட்சன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்தாலும் 166 ரன்களை அடித்தனர். பின்பு 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மஹாராஜாஸ் அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது.

கவுதம் கம்பிர்-ஐ தவிர்த்து மற்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்தனர். இறுதி ஓவர் வரை போராடிய இந்திய அணியால் 164 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது வேர்ல்ட் ஜென்ட்ஸ் அணி.

இதில் அதிகபட்சமாக கவுதம் கம்பிர் 68, முகமத் கைப் 21, ராபின் உத்தப்பா 29, சுரேஷ் ரெய்னா 19 ரன்களை அடித்துள்ளனர். இதில் ஹர்பஜன் கைப்பற்றிய விக்கெட்டை இணையத்தை கலக்கி வருகிறது.

வீடியோ :

வேர்ல்ட் ஜென்ட்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது 2.1 ஓவரில் ஹர்பஜன் வீசிய பந்தை எதிர்கொண்டார் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில். அப்பொழுது அட்டகாசமாக பவுலிங் செய்த ஹர்பஜன் ஸ்டம்ப்-ஐ கழற்றியது.

இதனை பார்த்த கிறிஸ் கெய்ல் எப்படி விக்கெட் போனது என்று வாயடைத்து போய் நின்றார். அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

https://twitter.com/Anna24GhanteCh2/status/1634611071808937986

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here