வீடியோ ; நீ இரு நான் பாத்துக்குறேன் ; பாண்டியாவின் நம்பிக்கையான செயல் இணையத்தை கலக்கி வருகிறது ;

ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டிகள் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது..!

இந்திய மற்றும் பாக்கிஸ்தான் போட்டி:

ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் சியா முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு பெரிய அளவில் தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதுமட்டுமன்றி நம்பிக்கை நாயகன் பாபர் அசாம் 10 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களை அடித்தனர்.

பின்பு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. ஆனால் கே.எல்.ராகுல் விளையாடிய முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். அதனால் பின்னடைவு ஏற்பட்டது, அதுமட்டுமின்றி சிறிது பயத்துடன் விளையாடிய இந்திய அணி இறுதி வரை போராடி 148 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய.

நம்பிக்கை நாயகனின் வருகை:

ஹர்டிக் பாண்டிய கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை. அதன்பிறகு நான் பவுலிங் சரியாக வீசும் வரை என்னை எந்த விதமான போட்டிகளிலும் தேர்வு செய்ய வேண்டாம் என்று ஹர்டிக் பாண்டியவே கூறினார்.

அதனை தொடர்ந்து கடந்த ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறார் ஹர்டிக் பாண்டிய. ஆமாம், அதேபோல தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்து முக்கியமான மூன்று விக்கெட்டை கைப்பற்றினார். அதனால் தான் பாகிஸ்தான் அணியை 147 ரன்களுக்குள் மடக்க முடிந்தது.

அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டம் தான் வெற்றிக்கு முக்கியமான காரணம். இறுதி ஓவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது இந்திய. ஆனால் எதிர்பாராத வகையில் ரவீந்தர ஜடேஜா இறுதி ஓவர் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அதனால் இந்திய அணிக்கு மன அழுத்தம் அதிகமானது. இருப்பினும் அந்த நேரத்தில் ஒரு டாட் பந்து ஆனது. அப்பொழுது ஹர்டிக் பாண்டிய செய்த செயல் (நான் பாத்துக்கிறேன்) என்பது போல தினேஷ் கார்த்திகை பார்த்தார். பின்பு அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் ஹர்டிக் பாண்டிய. நிச்சியமாக இந்த வெற்றியை ஒருபோதும் யாராலும் மறக்க முடியாத போட்டியாக மாறியுள்ளது.