வீடியோ : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்றதால் அழுது கொண்டே வெளியேறிய பாகிஸ்தான் வீரர் ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை நேற்று முன்தினம் தான் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தான் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டியின் சுருக்கம்:

டாஸ் வென்ற இந்திய முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்தாலும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து கொண்டு வந்தனர். அதனால 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 147 ரன்களை அடித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

பின்பு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. தொடக்க வீரரான கே.எல்.ராகுல் முதல் பந்தில் போல்ட் அவுட் ஆன காரணத்தால் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக தான் பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும், இறுதி ஓவரில் தான் இந்திய அணி தீரில் வெற்றியை கைப்பற்றியது.

ஆமாம், 19.4 ஓவரில் 148 ரன்களை அடித்த இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி.

பாகிஸ்தான் வீரரின் உழைப்பு:

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான நசீம் ஷா சிறப்பாக பவுலிங் செய்தார் என்பது தன உண்மை. முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் கே.எல்.ராகுலின் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் பின்னடைவுக்கு பாகிஸ்தான் வீரரான நசீம் பவுலிங்கும் ஒரு காரணம் தான். அதுமட்டுமின்றி போட்டிகள் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் அவருக்கு காலில் வலி ஏற்பட்டது. அதனை பொறுத்து கொண்டு சிறப்பாக பவுலிங் செய்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இறுதி ஓவரில் பாகிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை பொறுத்து கொள்ள முடியாமல் நசீம் அழுது கொண்டே மைதானத்தில் இருந்து வெளியேறிய வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவு வருகிறது.

வீடியோ ;