வீடியோ ; விராட்கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இதுதான் ; வெளியான அதிர்ச்சி தகவல் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 44 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைய அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சி எடுத்து வருகின்றனர்.

ஆமாம், இதுவரை நடந்து முடிந்த போட்டியில் குஜராத் அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி மூன்றாவது இடத்திலும், சென்னை அணி நான்காவது இடத்திலும் உள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகள் அனைத்து அணிகளுக்கும் முக்கியமான ஒன்று.

விராட்கோலி மற்றும் கம்பீர் இடையே ஏற்பட்ட மோதல் :

இரு தினங்களுக்கு முன்பு கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 126 ரன்களை மட்டுமே அடித்தனர்.

பின்பு 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு பேட்டிங் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். அதனால் 19.5 ஓவர் வரை போராடி விளையாடிய லக்னோ அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 108 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றதது.

இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி இறுதி பந்துவரை விளையாடி பெங்களூர் அணியை வீழ்த்தியது. அப்பொழுது லக்னோ அணியின் ஆலோசகராக இருக்கும் கம்பீர் பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். அதனால் பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோபம் ஏற்பட்டது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லக்னோ அணியை வென்ற பெங்களூர் அணி சந்தோஷத்தில் மூழ்கியது. அதுமட்டுமின்றி, விராட்கோலி வழக்கம்போல் அவரது சந்தோஷத்தை அக்குரோசமாக வெளிப்படுத்தினார். இதனால் கம்பீர் மற்றும் விராட்கோலி-க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் வீடியோ இணையத்தில் வைரலாக பரவினாலும் காரணம் என்னவென்று யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் முன்னணி பத்திரிகை ஒன்று விராட்கோலி, கம்பீர் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையை வெளியிட்டுள்ளனர். அதில்,

கம்பீர் : என்ன சொன்ன ?

விராட்கோலி : நீங்க ஏன் இடையில் வருகிறீர்கள் ? உங்களை பற்றி நான் எதுவும் பேசவில்லையே..!

கம்பீர் : நீ எதற்க்கு எங்கள் (லக்னோ ) வீரர்களை பேசுகிறாய் ? அவர்களை பற்றி பேசுனால் என்னுடைய குடும்பத்தை பற்றி பேசுவதும் ஒன்று தான்..!

விராட்கோலி : அப்படி என்றால் உங்க குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்…!

விராட்கோலி மற்றும் கம்பீர் இடையே ஏற்பட்ட மோதல் நிச்சியமாக கிரிக்கெட் விளையாட்டை பாதிக்கும் என்ற காரணத்தால் விராட்கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவருக்கும் அந்த போட்டியின் முழு சம்பளத்தையும் பைன் ஆக செலுத்த வேண்டுமென்று பிசிசிஐ அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமான விஷயம் தான். அதுமட்டுமின்றி, போட்டியில் வீரர்களுக்கு இடையே மோதல் வருவது வழக்கம் தான். ஆனால் கம்பீர் ஒரு ஆலோசகராக தேவையில்லாமல் விராட்கோலியிடம் சண்டை போட்டுள்ளார் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆகிய உங்களுடைய கருத்து என்ன ?? இதில் யார் மேல் தவறு இருக்கிறது ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here