இவரை அணியில் இருந்து வெளியேற்றுவது சிரமம் ; சிக்கலில் இருக்கும் தோனி ; CSK அணியின் தோல்விக்கு இவர் தான் காரணமா ?

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 44 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில், குஜராத் அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி மூன்றாவது இடத்திலும், சென்னை அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, முதல் நான்கு இடத்தில் இருக்க வேண்டுமென்றதால் லக்னோ, குஜராத், சென்னை, ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. அதனால் இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் விளையாடிய இரு போட்டிகளிலும் மோசமான நிலையில் தோல்வியை பெற்றுள்ளது. டேவன் கான்வே, ருதுராஜ், ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே போன்ற வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்து ரன்களை அடித்தாலும், இறுதியாக பவுலிங் சென்னை அணிக்கு மோசமான நிலையை உருவாக்கி வருகிறது.

ஆமாம், அதனால் தொடர்ந்து இரு தோல்விகளை பெற்றுள்ளது சென்னை. அதிலும் குறிப்பாக ரன் -மெஷின் என்று அழைக்கப்படும் துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்களையும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 49 ரன்களையும் விட்டுக்கொடுத்துள்ளார்.

ஒருவேளை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் அதிகமாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாக சென்னை அணி வென்றிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருந்தன. துஷார் தேஷ்பாண்டே-வை அணியில் இருந்து வெளியேற்றவும் முடியாத நிலையில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஆமாம், இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய துஷார் தேஷ்பாண்டே 17 விக்கெட்டை கைப்பற்றி அதிக விக்கெட்டை கைப்பற்றிய பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதனால் உடனடியாக அணியில் இருந்து வெளியேற்றவும் முடியாது. இருப்பினும், தீபக் சஹார் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிவிட்டால் தேஷ்பாண்டே-வை வெளியேற்ற வாய்ப்புகள் இருக்கிறது.

தீபக் சஹார் அணிக்கு திரும்புவாரா ?

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் கடந்த 5 போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருகிறார் தீபக் சஹார். கடந்த சில போட்டிகளில் சென்னை அணியின் பவுலிங் மோசமான நிலையில் இருப்பதால் தீபக் சஹாரின் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

தீபக் சஹாரின் காயத்தை பற்றி பேசிய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான பிளெம்மிங் கூறுகையில் : ” எனக்கு தெரிந்து தீபக் சஹார் மே முதல் வாரம் நிச்சியமாக போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறிருந்தார் ஸ்டீபன்.”

அப்படி பார்த்தால் இன்று மதியம் 3:30 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் விளையாட உள்ளனர். இதில் தீபக் சஹாரின் பங்களிப்பு சென்னை அணிக்கு கிடைக்குமா ? இல்லையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.