வீடியோ : ஒரே நேரத்தில் ஜடேஜா மற்றும் தோனி மிஸ் தான் ரன் -அவுட் ; மிஸ் ஆகிடுச்சு ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை அணிக்கு இதுவரை இல்லாத அளவிற்கு பேட்டிங் ஆர்டர் அட்டகாசமாக அமைந்துள்ளது. ஆமாம், ருதுராஜ், கான்வே, ஷிவம் துபே, ரஹானே, மொயின் அலி, ராயுடு, ஜடேஜா மற்றும் தோனி போன்ற வீரர்கள் அட்டகாசமாக விளையாடி வருகின்றனர். அதனால் ஒரு சில போட்டிகளில் 200க்கு மேற்பட்ட ரன்களை விளாசி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

33வது போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்-கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு அட்டகாசமான பேட்டிங் அமைந்தது. தொடக்க வீரரான ருதுராஜ், டேவன் கான்வே, ரஹானே மற்றும் ஷிவம் துபே போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 235 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது. ஆமாம், ஜேசன் ராய் மற்றும் ரிங்கு சிங் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை விளாசினர்.

இருப்பினும், ஜேசன் ராய் விக்கெட்டை இழந்த பிறகு கொல்கத்தா அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்த காரணத்தால் 8 விக்கெட்டை இழந்த பிறகு 186 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றுள்ளது சென்னை.

தோனி மற்றும் ஜடேஜா மட்டும் சரியான நேரத்தில் ரன் – அவுட் செய்திருந்தால் சென்னை அணியால் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றிருக்க முடியும். ஆமாம், ஜேசன் ராய் மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்கள்.

பார்ட்னெர்ஷிப் வலுவாக அமைந்த காரணத்தால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. 8.6 ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை எதிரிகொண்டார் ஜேசன் ராய். அப்பொழுது ஜேசன் அடித்த பந்து ஜடேஜா கைபட்டு Non-Striker -ல் இருக்கும் ஸ்டம்ப்-ஐ அடித்தது. ஆனால் பைஸ் கீழே விழுகாத காரணத்தால் அவுட் இல்லாமல் போனது. அதே நேரத்தில் ஜேசன் ராய் தெரியாமல் ஓடி வந்துவிட்டார். அந்த நேரத்தில் தோனியும் ரன்-அவுட்டை மிஸ் செய்தார். அதன்வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோ :

இந்த சம்பவம் நடந்த நேரத்தில் ஜேசன் ராய் 19 ரன்களையும், ரிங்கு சிங் 1 ரன்னை மட்டுமே அடித்திருந்தனர். ஆனால் இறுதியாக ஜேசன் ராய் 61 மற்றும் ரிங்கு சிங் 53* ரன்களை விளாசியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here