வீடியோ : SRH அணிக்கு எதிரான போட்டியில் பகையை தீர்த்து கொண்ட கேப்டன் டேவிட் வார்னர் ; நியாபகம் இருக்கிறதா ?

0

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஐடென் மார்க்ரம் தலைமையிலான ஹைதெராபாத் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி ஹைதெராபாத்-ல் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி வீரர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த டெல்லி அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9விக்கெட்டை இழந்த நிலையில் 144 ரன்களை மட்டுமே அடித்தனர். இதில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 25, மனிஷ் பாண்டே 34, அக்சர் பட்டேல் 34 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது.

ஆமாம், நம்பிக்கை நட்சத்திரம் ஹார்ரி புரூக் வெறும் 7 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் அட்டகாசமாக விளையாடிய மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி 49 ரன்களை விளாசினார். இருப்பினும் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் விக்கெட்டை இழந்தனர்.

இறுதி ஓவர் வரை போராடிய சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 137 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் மயங்க் அகர்வால் 49, ராகுல் த்ரிப்தி 15, க்ளாஸென் 31, வாஷிங்டன் சுந்தர் 24* ரன்களை அடித்துள்ளனர். அதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

டேவிட் வார்னர் வெற்றியை கொண்டாடிய விதம் ரசிகர்களால் பேசப்பட்டுள்ளது ;

ஆஸ்திரேலியா வீரரான வார்னர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் வரை சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் சிறப்பாகி விளையாடி வந்துள்ளார். அதிலும் இறுதியாக 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதெராபாத் கேப்டனாக இருந்த வார்னரால் சரியாக அணியை வழிநடத்த முடியவில்லை.

அதனால் அணியின் நிர்வாகம் வார்னர்-ஐ அணியில் இருந்து வெளியேற்றினார்கள். இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் எதிர்ப்புகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். பின்பு 2022ஆம் ஆண்டு ஹைதெராபாத் அணியில் இருந்து வெளியேறினார் வார்னர். அதனை அடுத்து இப்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, கேப்டனான ரிஷாப் பண்ட் -க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் டேவிட் வார்னர்-ஐ கேப்டனாக நியமனம் செய்துள்ளனர். அதிலும் நேற்றைய போட்டி சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியிடம் இருந்தது. அட்டகாசமாக பவுலிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றதால் வார்னர் ஆக்குரோசமாக சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here