ஒரு நிமிடம் இருங்க ; என்னை பற்றி நான் யோசித்ததே இல்லை ; எனக்கு இதுதான் முக்கியம் ; ரஹானே ஓபன் டாக் ;

49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் புள்ளிபட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

போட்டியின் சுருக்கம் :

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது.

தொடக்க வீரரான ருதுராஜ் 35 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், ரஹானே, ஷிவம் துபே, டேவன் கான்வே போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 235 ரன்களை அடித்து விளாசியது சென்னை அணி.

அதில் அதிகபட்சமாக ருதுராஜ் 35, கான்வே 56, ரஹானே 71*, ஷிவம் துபே 50, ரவீந்திர ஜடேஜா 18, தோனி 2* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 326 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடக்க வீரராக நரேன் மற்றும் ஜெகதீஷன் பேட்டிங் செய்தனர்.

ஆனால் கொல்கத்தா அணி எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தால் தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் நிதிஷ் ரானா மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற இருவரும் அதிரடியாக விளையாட தொடங்கினார். பின்பு இருவரும் விக்கெட்டை இழந்த காரணத்தால் கொல்கத்தா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்து கொண்டே வந்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 186 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில், வெங்கடேஷ் ஐயர் 20, நிதிஷ் ரானா 27, ஜேசன் ராய் 61, ரிங்கு சிங் 53*, ஆண்ட்ரே ரசல் 9 ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்றதுள்ளது சென்னை. சென்னை அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் சென்னை அணிக்கு கிடைத்த பேட்டிங் லைன்.

ஆமாம், கடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியால் கைப்பற்ற பட்டவர் தான் ரஹானே. டெஸ்ட் வீரரான இவர், சென்னை அணியில் இணைந்த பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். அதனால், சிஎஸ்கே அணியின் நம்பிக்கையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாறியுள்ளார் ரஹானே.

போட்டி முடிந்த பிறகு பேசிய ரஹானே கூறுகையில் : “உண்மையிலும் நான் பேட்டிங் செய்து ரன்களை எடுப்பது எனக்கு சந்தோசமாக தான் இருக்கிறது. ஆனால், இன்னும் என்னுடைய முழுமையான திறன் வெளிவர வேண்டும். நான் இதே போல விளையாடி ரன்களை அடிக்க வேண்டும். அதிகமாக என்னை பற்றி யோசிக்காமல் அணியாக விளையாடுவது தான் எனக்கு பிடித்திருக்கிறது.”

“இதேபோல நான் தொடர்ச்சியாக விளையாடி ரன்களை கைப்பற்ற ஆசைப்படுறேன். தோனியின் அணியில் நீங்க விளையாட போது பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். நான் எப்படி ரன்களை அடிப்பது சாதனை செய்வது என்று நான் நினைக்க ஆசைப்படவில்லை.”

“என்னுடைய ஒரே எண்ணம் அணியாக சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்ற வேண்டுமென்பது தான். நான் அதிகமாக பேசுவதை விட என்னுடைய பேட்டிங் தான் பேச வேண்டும் என்று கூறியுள்ளார் ரஹானே. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 71* ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.”