முக்கியமான நேரத்தில் சென்னை அணியில் இருந்து வெளியேறிய ஆல் – ரவுண்டர் ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

0

ஐபிஎல் 2023 : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த 2023 தொடர் லீக் போட்டிகள் இன்று இரவுடன் நிறைவடைய உள்ளது. அதனை அடுத்து ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளதால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளின் விவரம் :

முதல் இடத்தில் 18 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ள காரணத்தால் இந்த இரு அணிகளும் முதல் ப்ளே – ஆஃப் போட்டியில் விளையாட இருகின்றனர். மூன்றாவது இடத்தில லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி தேர்வாகியுள்ளனர்.

நான்காவது இடத்திற்கு மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றனர். ஆமாம், இன்று மதியம் நடைபெற உள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர். இரவு போட்டியில் பெங்களூர் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இதில் யார் வெற்றிபெறுகிறார்களோ, அந்த அணி தான் லக்னோ அணியுடன் இரண்டாவது ப்ளே – ஆஃப் சுற்றில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

நேற்றுவரை சென்னை அணி ப்ளே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? இல்லையா ? என்று பல குழப்பம் இருந்தது. ஆனால், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்த்து விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டகாசமாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்ற சென்னை அணி இரண்டாவது இடத்தை தக்கவைத்து கொண்டனர். ஆமாம், வரும் 23ஆம் தேதி இரவு சென்னை உள்ள சிதம்பரம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

சென்னை அணியில் இருந்து விலகிய ஆல் – ரவுண்டர் :

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தில் 16.25 கோடி விலை கொடுத்து இங்கிலாந்து அணியின் ஆல் – ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியது சென்னை. ஆனால் அதில் ஏதாவது பலன் இருக்கிறதா ? என்று கேட்டால் கிடையாது. ஆமாம், ஐபிஎல் 2023 போட்டியில் வெறும் இரு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் விளையாடவில்லை.

ஐபிஎல் தொடங்கும் முன்பே நான் ஐபிஎல் 2023 இறுதி கட்டத்தில் நான் இருக்க மாட்டேன் என்று குறிருந்தார் பென் ஸ்டோக்ஸ். ஏனென்றால், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் பங்கேற்க பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இருந்து விடைபெறுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பென் ஸ்டோக்ஸ்-ஐ அணியில் தேர்வு செய்தது சரியான விஷயம் ஆ ? அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்னவென்று கமெண்ட்ஸ் பண்ணுங்க.. !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here