எங்க அணியில் இரு டெத் பவுலர்கள் கிடைத்துவிட்டனர் ; இனிமேல் இவரை பற்றி யோசிக்க தேவையில்லை ; தோனி ஓபன் டாக்

0

ஐபிஎல் 2023 : மார்ச் 31ஆம் தேதி முதல் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஐபிஎல் 2023 போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. வருகின்ற 23ஆம் தேதி முதல் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற இருக்கிறது.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் நேற்று நடந்த போட்டியில் டெல்லி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 223 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ருதுராஜ் 79, டேவன் கான்வே 87, ஷிவம் துபே 22, மகேந்திர சிங் தோனி 5*, ரவீந்திர ஜடேஜா 20* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது.

ஆமாம், தொடக்க வீரரான பிருத்வி ஷாவ் 5 ரன்களிலும், பிலிப் சால்ட் 3 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். அதனால் டெல்லி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இறுதி ஓவர் வரை விளையாடிய டெல்லி அணி 9 விக்கெட்டை இழந்த நிலையில் 146 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் முதல் qualifier 1 போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. அதுமட்டுமின்றி, முதல் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும் மோத உள்ளனர்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டனான தோனி கூறுகையில் : “வெற்றிக்கு இதுதான் காரணம் என்று ஒன்றும் சொல்ல முடியாது. எப்பொழுதுமே அணியில் உள்ள வீரர்களை வைத்து சோதனை செய்ய வேண்டும். அதன்பின்பு தான் சரியான வீரர்களை தேர்வு செய்ய முடியும்.”

“சக வீரர்கள் எதில் சரியாக இல்லையோ, அதில் தான் அவர்களை தயார் செய்யவேண்டும். அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் முக்கியம் தான். ஏனென்றால், அவர்கள் இல்லையென்றால் எதுவும் கிடையாது. அதிலும் குறிப்பாக டெத் பவுலிங் தான் மிகமுக்கியமான ஒன்று.”

“குறிப்பாக துஷார் தேஷ்பாண்டே இப்பொழுதெல்லாம், அனைத்து விதமான அழுத்தத்திலும் பவுலிங் செய்து வருகிறார். எப்பொழுதும் பத்திரான டெத் ஓவர்களில் பவுலிங் செய்வார்., அந்த இடத்தில் இப்பொழுது துஷார் பாண்டேவும் பின்தொடர்ந்து வருகிறார்.”

“எப்பொழுதும் வெளியே இருந்து அணியில் இருக்கும் வீரர்களை கணிப்பது கடினமான விஷயம் தான். அதனால் வீரர்கள் 10 சதவீதம் கொடுத்தால், நாங்கள் (நிர்வாகம்) 50 சதவீதம் அணியில் விளையாட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here