இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பும்ரா தேவை இல்லை ; மும்பை அணிக்கு கிடைத்த பொக்கிஷமே இவர் தான் ;

ஐபிஎல் 2023 : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் இன்று இரவுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனை அடுத்து ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளதால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முடிவுகள் :

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு தொடக்க ஆட்டம் அருமையாக அமைந்தது. விவரண்ட் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் அருமையாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 200 ரன்களை அடித்தனர். அதில் விவரண்ட் சர்மா 69, மயங்க் அகர்வால் 83, க்ளாஸென் 18, மார்க்ரம் 13* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி சுலபமாக கிடைத்தது.

தொடக்க வீரரான இஷான் கிஷான் 14 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் கேமரூன் க்ரீன், ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய மூன்று வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர். அதனால் 18 ஓவர் முடிவில் 201 ரன்களை அடித்து சன்ரைசர்ஸ் அணியை வென்றது மும்பை அணி.

மும்பை அணிக்கு கிடைத்த பொக்கிஷம் :

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பவுலராக திகழ்கிறார் பும்ரா. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து காயம் ஏற்பட்ட காரணத்தால் பல போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஐபிஎல் 2023 போட்டியில் பங்கேற்க முடியும் என்று தகவல் வெளியானது.

ஆனால் ஐபிஎல் போட்டியை தொடர்ந்து ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அதனால் ஒருநாள் போட்டிக்கு தயார் செய்யவேண்டுமென்று பும்ராவை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கினர்.

முதல் சில போட்டிகளில் மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது என்று நினைத்தனர். ஆனால் கடந்த சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இறுதி ஓவரில் மதுவால் அருமையாக பவுலிங் செய்து வருகிறார்.

அதாவது பும்ரா இடத்திற்கு பதிலாக மதுவால் இடம்பெற்றதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலம் கிடைத்துள்ளது. இன்றைய போட்டியிலும் 18.6 ஓவரில் மதுவால் வீசிய பந்தை எதிர்கொண்டார் ஹார்ரி புரூக், அப்பொழுது யாக்கர் வீசினார். அதனை அடிக்க முடியாமல் திணறினார். அதுமட்டுமின்றி, போல்ட் அவுட் ஆகி புரூக் விக்கெட்டை கைப்பற்றினார் மதுவால். 6 போட்டிகளில் விளையாடிய ஆகாஷ் மதுவால் 8 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.