CSK அணியின் முக்கியமான டெத் பவுலர் இனிமேல் இவர் தான் ; சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார் ; தோனி ஓபன் டாக் ;

0

ஐபிஎல் 2022:

நேற்று மதியம் 3:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 50க்கு மேற்பட்ட ரன்களை அடித்தார். பின்னர் தமிழக வீரரான ஜெகதீசன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 39 ரன்களை அடித்தார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 133 ரன்களை அடித்தது சென்னை சசூப்பர் கிங்ஸ் அணி. அதில் ருதுராஜ் 53, டேவன் கான்வே 5, மொயின் அலி 21, ஜெகதீசன் 39, தோனி 7 ரன்களை அடித்தனர். பின்பு 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

தொடக்க வீரரான சஹா சிறப்பாக விளையாடி 67க்கு மேற்பட்ட ரன்களை குவித்தார். அதனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றி பெற சுலபமாக மாறியது. ஆனால், சுமன் கில், மத்தேவ் வெட் , ஹார்டிக் பாண்டிய தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். ஆனால் 19.1 ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டை இழந்த நிலையில் 137 ரன்களை அடித்தனர்.

அதில் சஹா 67, சுமன் கில் 18, மத்தேவ் வெட் 20, ஹார்டிக் பாண்டிய 7, டேவிட் மில்லர் 15 ரன்களை அடித்துள்ளனர். அதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 13 போட்டிகளில் 10 போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்திலும், சென்னை அணி 9வது இடத்திலும் உள்ளது.

போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி கூறுகையில் ; “முதலில் பேட்டிங் செய்வது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை.வேகப்பந்து வீச்சாளருக்கு போட்டி சாதகமாக மாறியது தான் உண்மை, ஏனென்றால் பேட்ஸ்மேன்களால் சரியாக விளையாட முடிவில்லை.”

“இருப்பினும் இரண்டாவது பாதியில் போட்டி சரியாக தான் சென்றது. எங்கள் அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக அணியை வழிநடத்தி கொண்டு சென்றனர். இருப்பினும் மிடில் ஒவேரில் ரன்களை அடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இனிவரும் போட்டிகளில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் , சிவம் துபே-வை நான் முன்பே களமிறங்க வைத்தேன்.”

“ஆனால் பாத்திரனா சிறப்பான டெத் ஓவரில் பவுலிங் செய்து வருகிறார் என்பது தான் உண்மை. மலிங்க போலவே சிறப்பாக பவுலிங் செய்தார். சில தவறுகள் உள்ளன, இருப்பினும் எனக்கு ப்ளேயிங் 11ல் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று நான் நினைத்தேன் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here