அடுத்த ஆண்டு CSK அணியின் கேப்டன் இவர் தான் ; இன்னும் இவருடைய ஆட்டம் தொடரும் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

ஐபிஎல் :

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். அதன்பின்னர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டிகள். இதுவரை வெற்றிகரமாக 14 சீசன் நடந்து முடிந்த நிலையில், 15வது சீசன்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுள் ஒன்று தான் சென்னை. இதுவரை மொத்தம் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடங்கிய ஆண்டு முதல் இதுவரை சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் மகேந்திர சிங் தோனி.

கேப்டன் சர்ச்சை:

இந்த ஆண்டு தொடக்கத்தில் தோனிக்கு பதிலாக இனிமேல் ரவீந்திர ஜடேஜா தான் அணியை வழிநடத்துவார் என்று சென்னை நிர்வாகம் உறுதியாக கூறியது. அதன்படி முதலில் சில போட்டிகளில் சென்னை அணி மிகவும் மோசமான தோல்விகளை பெற்று வந்தது.

அதுமட்டுமின்றி, கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா அழுத்தம் அதிகமான காரணத்தால் அவரால் சரியாக விளையாட முடியவில்லை என்பது தான் உண்மை. அதனால் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார் மகேந்திர சிங் தோனி. ஆனால் அடுத்த ஆண்டு யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது..?

முன்னாள் வீரர் உறுதியான கருத்து :

மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 40 வயதான மகேந்திர சிங் தோனி இன்னும் சில ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் : ” இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடியதை பார்த்தீர்களா ? அவர் இன்னும் போட்டிகளில் சுறுசுறுப்பாக விளையாடி வருகிறார். நிச்சியமாக வயதான வீரர்கள் பீல்டிங் செய்யும்போது தடுமாற்றம் ஏற்படுவது வழக்கம் தான்.”

“ஆனால் இங்கு தோனி அதிவேகமாக ரன்களை அடிப்பது, விக்கெட் கீப்பிங் செய்வதை பார்த்தால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. நிச்சியமாக இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார். ஒரு சில போட்டிகளில் விரைவாக விக்கெட்டை இழந்தாலும் நிச்சியமாக விட்டுக்கொடுக்க மாட்டார் தோனி என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க அடுத்த ஆண்டும் சென்னை அணியை தோனி வழிநடத்தினால் சிறப்பாக இருக்குமா ?? கோப்பையை வெல்ல முடியுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here