இல்லை இல்லை ..! இவர் நிச்சியமாக அடுத்த ஆண்டு CSK அணியில் விளையாடுவார் ; CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் உறுதி ;

0

ஐபிஎல் 2022:

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், இன்னும் சில நாட்கள் மட்டுமே மீதமுள்ளது ப்ளே – ஆஃப் சுற்றுக்கு. அதனால் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் 2022 சென்னை அணி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 12 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.  அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, இது இரண்டாவது முறை ஐபிஎல் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது.

ராயுடு அணியில் இருந்து விலகல் :

நேற்று அவரது சமூகவலைத்தளங்களில் நான் இந்த ஆண்டு முடிந்த பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி விடுவேன் என்று அறிவித்தார். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்களை அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, முக்கியமான நேரங்களில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார் ராயுடு.

சென்னை அணியின் CEO விளக்கம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன் ராயுடு ஓய்வை அறிவித்ததை பற்றி தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில் ” நான் ராயுடுவிடம் பேசினேன். அவர் நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக போவதில்லை.”

அவருக்கு (ராயுடு) இந்த ஆண்டு விளையாடிய ஆட்டம் எதுவும் சரியாக இல்லாத விரக்தியால் தான் இந்த முடிவை கையில் எடுத்துள்ளதாக கூறினார். ஆனால் , சில தெளிவான முடிவுகளுக்கு பிறகு அவரது ட்வீட் ஐ- அளித்துவிட்டார். அதுமட்டுமின்று அவர் ஓய்வு பெறவில்லை என்று கூறியுள்ளார் காசி விஸ்வநாதன்.”

நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ” நான் இப்பொழுது மகிழ்ச்சியாக ஒரு விஷயத்தை சொல்ல ஆசைப்படுகிறேன். இதுதான் என்னுடைய இறுதி ஐபிஎல் போட்டிகள். நான் 13 ஆண்டுகள் இரு பெரிய அணிகளை விளையாடியது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்கும் மிக்க நன்றி என்று பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் ராயுடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here