இந்த ஆண்டு ஐபிஎல் 2021 வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்க படுகிறது. அதுவும் ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த வரவேற்பு கண்டிப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி சென்னை அணியின் கேப்டன் தோனி இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலகியதா அவரை ஐபிஎல் போட்டியில் மட்டும்தான் பார்க்க முடியும் அதுவும் கேப்டன் இடத்தில்.
அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதுமே நல்ல ஒரு அணியாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அதனால் நிச்சயமாக இந்த ஆண்டு ஐபிஎல் 2021 நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது.
நம்ம தல தோனி சென்னை வந்துள்ளார். காரணம் தெரியுமா? வருகின்ற ஐபிஎல் 2021 போட்டியில் நன்றாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூட இருக்கலாம். தமிழ் நாட்டு (சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் தோனிக்கும் இடையே நல்ல ஒரு நட்புறவு இருக்கிறது.
சென்னை வந்த மகேந்திர சிங் தோனி 5 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று நிபந்தனை வந்துள்ளது, அதனால் அதன் பிறகு பயிற்சி மேற்கொள்வார் என்று எதிர்பார்க்க படுகிறது. அதுமட்டுமின்றி அம்பதி ராயுடுவும் சென்னை வந்துள்ளார். அதனால் கண்டிப்பாக ஐபிஎல் 2021 போட்டிக்கான பயிற்சியாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி பயிற்சி துவங்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சென்னை அணியின் வீரர்களும் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நல்ல ஒரு ஆட்டத்தை மற்ற அணிகளுக்கு இடையே போட்டியில் வெளிப்படுத்தும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் நம்பப்படுகிறது.