நிச்சயமாக வருகின்ற ஐபிஎல் 2021 போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு சந்தோசத்தையும் பல எதிர்பார்ப்புகளையும் கொண்டு இருக்க போகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2021, வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறும் என்று நம்பப்படுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் , மும்பை இண்டியன்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , கிங்ஸ் XI பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோத போகின்றன.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடந்த வேண்டாம் என்று பல கிரிக்கெட் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியதால் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்தது பிசிசிஐ. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி நிச்சயமாக இந்தியாவில் தான் நடக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிகமான ரன்கள் அடித்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2013 ஆம் அன்று புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் 263 ரன்களை எதுத்துள்ளது பெங்களூரு அணி. இரண்டாவது இடத்திலும் பெங்களூரு அணிதான் உள்ளது. 2016 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 248 ரன்களை எடுத்துள்ளது பெங்களூரு அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. 2010 அம ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிபட்சமாக 246 ரணங்களை எடுத்துள்ளது. அதே போல இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் இந்த மூன்று அணி அதிக ரன்களை எடுக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
மும்பை இண்டியன்ஸ் :
மூன்று முறை ஐபிஎல் கோப்பை கைப்பற்றிய முதல் அணி மும்பை இந்தியன்ஸ் அணி என்றே சொல்லலாம்.அதேபோல மிகவும் கடினமான அணி என்றல் மும்பை அணிதான். அதிகமான வெற்றிகளை பெற்றது மும்பை இண்டியன்ஸ். ரோஹித் சர்மா அணியை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மா மற்றும் டி காக் ஆகிய சிறப்பான ஓப்பனிங் இருப்பதால் அணிக்கு நல்ல ரன்களை எடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஹர்டிக் பாண்டிய மற்றும் பொல்லார்ட் ஆகிய மிக சிறந்த அதிரடி வீரர் இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல ஒரு பலம் என்றே சொல்லலாம். இறுதி நேரத்தில் நல்ல ரன்களை எடுப்பதில் மும்பை இண்டியன்ஸ் அணியை தவற எந்த அணிய இல்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :
இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி நல்ல ஒரு சிறப்பான ஆட்டத்தை எல்லா போட்டிகளிலும் சிறப்பான முறையில் விளையாடி செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவில்லை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. ஆனால் விராட் கோலி மற்றும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆகிய சிறப்பான பேட்ஸ்மேன் இருப்பதால் நிச்சயமாக நல்ல ரன்களை எடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு 2021 ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் புதிதாக மேக்ஸ் வெல் இணைத்துள்ளார். கடந்த ஆண்டு பெங்களூரு அணியில் அறிமுகமான ஓப்பனிங் பேட்ஸ்மேன் படிக்கல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்ப படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எல்ல போட்டிகளிலும் சிறப்பான முறையில் விளையாடி அதிகமான போட்டிகள் அனைத்தும் இறுதிவரை கொண்டு சென்று வெற்றியை கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த ஆண்டு சென்னை அணியில் பல சந்தேகம் ஏற்பதால் பல போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ஆனால் இறுதியாக விளையாடிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.