அட்டகாசமான வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே ; இந்த வருடம் கோப்பை சென்னை அணி தானா ?

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2023 போட்டிகள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடர். பின்பு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது/

இதுவரை 15 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில் 16வது சீசன் தொடங்க உள்ள நிலையில் அனைத்து வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தான் சென்னை அணியும் கடந்த வாரமே பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

சென்னை அணி :

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ப்ளே- ஆஃப் சுற்றுக்கு தேர்வான அணியாக திகழ்கிறது சென்னை. அதுமட்டுமின்றி, ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் மகேந்திர சிங் தோனி.

இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர். இருப்பினும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு மோசமான ஆண்டாக மாறியது.

இருப்பினும் இந்த ஆண்டு தொடரில் சிறப்பாக இருக்க வேண்டுமென்ற காரணத்தால் ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் அட்டகாசமான வீரர்களை கைப்பற்றியுள்ளது சென்னை. குறிப்பாக 16.5 கோடி விலை கொடுத்து இங்கிலாந்து ஆல் – ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியுள்ளது சென்னை.

மாற்று வீரரை தேர்வு செய்த சென்னை :

நியூஸிலாந்து வீரரான ஜேமிசன்-ஐ 2 கோடி கொடுத்து வாங்கியது சென்னை. அதன்பின்னர், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதனால் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டுமென்று பல ஆலோசனையில் இருந்த சென்னை அணி, இறுதியாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்துள்ளனர். ஆமாம், தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான சிசண்ட மகளா -ஐ தேர்வு செய்துள்ளனர்.

இவர் BBL போன்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இவர் 127 போட்டிகளில் விளையாடிய நிலையில் 136 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, BBL போட்டியில் 20 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை ஒரே போட்டியில் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், மகளா, டேவன் கான்வே, பிரிட்டோரியஸ், மதீஷா பாதிரான போன்ற வெளிநாட்டு வீரர்கள் இருக்கும்பட்சத்தில் சென்னை அணி எந்த வீரர்களை தேர்வு செய்ய போகிறார்கள் ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here