இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


நேற்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு விக்கெட்டை சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.


அதனால் பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் வெறும் 26 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணியால் 117 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதில் அதிகபட்சமாக விராட்கோலி 31 ரன்களை அடித்துள்ளார்.
பின்பு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் மிச்சேல் மார்ஷ் இணைந்து வெறும் 11 ஓவரில் 121 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.


அதனால் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருப்பதால் நாளை நடைபெற உள்ள போட்டியில் வெல்லும் அணிதான் கோப்பையை வெல்ல போகின்றனர். அதனால் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
போர்மில் இல்லாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் :
முன்பு இந்திய கிரிக்கெட் அணியில் விராட்கோலி-க்கு யார் மிடில் ஆர்டரில் வலுவாக விளையாடுவார் என்று பல குழப்பங்கள் எழுந்தது. அப்பொழுது தான் இந்திய அணியில் அறிமுகம் ஆனார் சூரியகுமார் யாதவ்.


டி-20 போட்டிகளில் அட்டகாசமாக ரன்களை அடித்து தொம்சம் செய்து வரும் சூரியகுமார் யாதவ் பல சாதனைகளையும் படைத்து வருகிறார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என்று வந்தால் சூரியகுமார் யாதவின் பங்களிப்பு மோசமான நிலைக்கு சென்று வருகிறது.
ஆமாம், இதுவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இரு போட்டிகளிலும் ஒரு ரன்களை கூட அடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பவுலரான ஸ்டார்க் கையில் விக்கெட்டை இழந்துள்ளார்.


சூரியகுமார் யாதவ் இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 0, 0, 14, 0, 31.4, 6,34, 4, 8ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதனால் சூரியகுமார் யதாவுக்கு பதிலாக மாற்று வீரரை அணியில் விளையாட வைக்க வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு கேள்வி ?
டி-20 போட்டிக்கான தொடரில் அதிரடியாக விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் மட்டும் மோசமான நிலையில் விளையாடி வருகிறார் ? அதனால் வெறும் டி-20 போட்டிக்கு மட்டும் தான் சூரியகுமார் யாதவ் சரியாக இருப்பாரா?