இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. அனால் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு எமனாக மாறியுள்ளது.
விக்ஷக்கப்பட்னம் : இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேட்டிங் அமைந்தது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 13 ரன்களிலும், சுப்மன் கில் எந்த ரன்களையும்’அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தார். 26 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய கிரிக்கெட் அணி வெறும் 117 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.
அதில் ரோஹித் சர்மா 13, சுப்மன்மன் கில் 0, விராட்கோலி 31, சூரியகுமார் யாதவ் 0, கே.எல்.ராகுல் 9, ஹர்டிக் பாண்டிய 1, ரவீந்திர ஜடேஜா 16, அக்சர் பட்டேல் 29, குல்தீப் யாதவ் 4 ரன்களை அடித்துள்ளனர்.
இதில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான 8 ஓவர் பவுலிங் செய்து 5 முக்கியமான விக்கெட்டை கைப்பற்றினார் ஸ்டார்க். ரோஹித் சர்மா, சுப்மன் கில், கே.எல்.ராகுல்,சூரியகுமார் யாதவ், முகமத் சிராஜ் போன்ற வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.