அவர் மட்டும் தயாராக இருந்தால் அடுத்த போட்டியில் வாய்ப்பு உறுதி ; ராகுல் டிராவிட் ஓபன் டாக் ; யார் தெரியுமா ?

0

டெஸ்ட் போட்டி : கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று தொடங்கிய நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் விளையாடி வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் அமையவில்லை.

தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து கொண்டு வந்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 177 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்பு பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான பேட்டிங் அமைந்தது.

அட்டகாசமாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 400 ரன்களை அடித்தனர். பின்பு இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடிய ஆஸ்திரேலியா அணியை வெறும் 91 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை கைப்பற்றியது இந்திய அணி.

அதனால் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்றது இந்திய. அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருக்கின்றனர்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனதில் இருந்து சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் “எப்பொழுதும் ஒரு வீரர் காயத்தில் இருந்து மீண்டு வந்தால் அது மிகவும் சிறப்பான செய்திதான். அதுமட்டுமின்றி, ஒரு வீரருக்கு காயம் ஏற்படுவது பிடிக்காத ஒன்று. அதிலும் இப்பொழுது ஸ்ரேயாஸ் மீண்டு வந்துள்ளது சந்தோசமாக விஷயம் தான்.”

“இரு தினங்களாக அவர் பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறார். இருப்பினும் அவரது பயிற்சியை வைத்து அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பது தெரிந்துகொள்ளலாம். அவர் மட்டும் 5 நாள் தொடர்ந்து விளையாட தயாராக இருந்தால், நேரடியாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். ஏனென்றால் ஸ்ரேயாஸ் இறுதியாக விளையாடிய போட்டிகளில் அடித்த ரன்கள் தான் காரணம்.” என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

அதுமட்டுமின்றி, முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன சூர்யகுமார் யாதவ் வெறும் 8 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். அதனால் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக சிறப்பான மிடில் ஆர்டர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here