தீடிரென்று சென்னை வந்துள்ளார் தல மகேந்திர சிங் தோனி …! காரணம் இதுதான் ; உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி 12,13, போன்ற இரு நாட்கள் நடத்த உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளையும் அறிமுகம் செய்துள்ளது.

அதனால் பழைய அணிகள் அனைத்தும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும் மற்ற வீர்ரகள் ஏலத்தில் பங்கேற்பார்கள் என்று பிசிசிஐ கூறியுள்ளது. பின்னர் புதிய இரு அணிகளும் ஏலத்தில் பங்கேற்ற வீரர்களில் அதிகபட்சமாக மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது பிசிசிஐ.

அதனால் ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் இந்த முறை சரியான வீரர்கள் அமைந்தால் மட்டுமே வரும் ஆண்டுகளில் சிறப்பாக அணியாக திகழும் என்றதால். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஆமாம்..! கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தலைமை தாங்கி வருகிறார் தோனி. சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே.

இருந்தாலும் சுரேஷ் ரெய்னா, ப்ராவோ போன்ற வீரர்கள் அணியில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தான் தோனி இப்பொழுது சென்னை வந்துள்ளார். நிச்சியமாக அது ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தை பற்றி ஆலோசனை செய்வதற்காக தான் இருக்கும் என்று தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு வீரர்கள் கைப்பற்றிய பிறகு இன்னும் 48 கோடி மட்டுமே மிதமுள்ளன. தோனியின் ஆலோசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக இருக்குமா ?? சரியான வீரர்களை ஏலத்தில் கைப்பற்றுமா சிஎஸ்கே அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்…>!

இதுஅவரி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் அதிகபட்சமாக நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர். அடுத்த ஆண்டு புதிய அணியுடன் களமிறங்கி வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?