விடைபெறுகிறார் மகேந்திர சிங் தோனி ; சென்னை அணியில் ஓய்வு பெற போகிறார் தோனி ; நிர்வாகம் கொடுத்த அப்டேட்..!!

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2023 போட்டிக்கான லீக் போட்டிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதனால் அனைத்து அணிகளுக்கு இடையேயான அதிரடியான மோதல் ஏற்பட்டு வருகிறது.

சென்னை அணி :

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு சென்னை அணியின் பேட்டிங் இந்த ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை போட்டிகளில் சென்னை அணி தோல்விக்கு பவுலிங் தான் முக்கியமான காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர்.

இருப்பினும் முதல் இரு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை கைப்பற்ற சென்னை அணி அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். வருகின்ற சனிக்கிழமை டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது சென்னை. அதில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது சென்னை.

முதல் இரு இடங்களிலும் ஏதாவது ஒரு இடத்தை கைப்பற்றினால், ப்ளே – ஆஃப் சுற்றில் ஒருமுறை தோல்வி பெற வாய்ப்பு இருக்கும். அப்படி இல்லையென்றால் தோல்வி பெற்ற உடன் ஐபிஎல் 2023 தொடரில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

விடைபெறுகிறாரா மகேந்திர சிங் தோனி ?

கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வை அறிவித்தார் தோனி. அதன்பின்பு வெறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார் தோனி. இருப்பினும் 42வயதான தோனி எந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக போகிறார் என்று பல ரசிகர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி மட்டுமின்றி, அனைத்து அணிகளும் அவரவர் ஹாம் மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அதனால் ஹாம் மைதானத்தில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் சென்னை அணியின் நிர்வாகம் கொடுத்த அறிவிப்பில் சென்னை ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதில் ” இன்னும் நாங்கள் அடுத்த கேப்டன் யார் என்று முடிவு செய்யவில்லை. தோனி தொடர்ந்து விளையாட ஆசைப்படுகிறார். அதுமட்டுமின்றி, தோனிக்கு பிறகு யார் கேப்டன் என்று முடிவுசெய்யவில்லை.”

“இருப்பினும் இன்னும் எத்தனை நாட்கள் தோனி சென்னை அணியில் விளையாடுவார் என்றும் தெரியவில்லை. இதுவரை தோனி ஓய்வை பற்றி எதுவும் சொல்லவில்லை. நாங்கள் புரிந்துகொண்டது ஒன்று தான் ” இன்னும் அதிக நாட்கள் இல்லையென்று.” என்று சென்னை அணி நிர்வாகம் தகவலை வெளியிட்டுள்ளனர்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here