சச்சின் டெண்டுல்கரை கேட்காமல் செய்த காரணத்தால் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் ; யாரு சாமி நீங்கல்லாம் ?

ஐபிஎல் 2023 : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 57 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்னும் இரு வாரங்களில் ஐபிஎல் 2023 போட்டிக்கான இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள காரணத்தால் அனைத்து அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. மற்ற நாடுகளை விட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் தோனி, சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி, ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அவர்கள் சொல்வதை கேட்பதற்கே பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களை போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ-ல் மட்டுமின்றி விளம்பரத்தில் நடிப்பதற்கும் பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டி வருகின்றனர். இருப்பினும், எந்த விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் தான்.

அதுமட்டுமின்றி, விராட்கோலி, சச்சின், தோனி போன்ற பிரபலமான வீரர்களின் ஓப்புதல் இல்லாமல் யாரும் அவர்களுடைய புகைப்படத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்ய கூடாது (குறிப்பாக ஒரு பொருளை விற்பதற்கு). ஆமாம், ஏனென்றால், சச்சின் தான் இதில் நடித்திருக்கிறார். அதனால் இந்த பொருளை வாங்கலாம் என்று பலர் பொருட்களை வாங்குவது வழக்கம்.

சமீபத்தில் Sachinhealth.in என்ற இணையத்தளத்தில் சச்சின் புகைப்படத்தை பயன்படுத்தி சச்சின் அனுமதியின்றி பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை பற்றி அதிர்ச்சி அடைந்த சச்சின் டெண்டுல்கர் போலீஸ்-ல் புகார் செய்துள்ளார். அதன்படி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.