சன்ரைசர்ஸ் கையில் உள்ளது சென்னை அணியின் வாய்ப்பு ; ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? சிஎஸ்கே அணி ?

ஐபிஎல் 2023: ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 64 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்னும் சில போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது.

அதுமட்டுமின்றி, குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று இடங்களில் இடம்பெற அனைத்து அணிகளும் போட்டி போட்டு கொண்டு விளையாடி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமாக மாறியுள்ளது பேட்டிங் ஆர்டர். ஆமாம், ருதுராஜ், டேவன், ஷிவம் துபே, ரஹானே, ராயுடு, மொயின் அலி, தோனி போன்ற வீரர்கள் அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர். சென்னை அணி இந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? இல்லையா ?

இதுவரை 13 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 7 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர். குறைந்தது 16 புள்ளிகள் இருந்தால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அப்படி இருக்கும்பட்சத்தில் சென்னை அணி 15 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ, சென்னை அணிகளுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று இரவு 7:30 மணியளவில் ஐடென் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோத உள்ளனர்.

இதில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி வெற்றிபெற்றால் 15 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் போன்ற இரு அணிகளும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

வருகின்ற சனிக்கிழமை டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். அதில் சென்னை அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்தில் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த ஆண்டு கோப்பையை வெல்லுமா ? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர். இந்த ஆண்டு வலுவாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லுமா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?