CSK அணியின் புதிய ப்ளேயிங் 11 இதுதான் ; இனிமேல் மாற்றமும் இல்லை ! தோல்வியும் இல்லை ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 25 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

இருப்பினும் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்ற சென்னை அணி இந்த முறை புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. அது சென்னை ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதுவரை சென்னை அணி மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி அதில் நான்கு போட்டியில் தோல்வியையும், 1 போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது.

நாளை இரவு 7:30 மணியளவில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். இதுவரை இந்த இரு அணிகளும் ஒரு முறை கூட நேருக்கு நேர் விளையாடியது இல்லை.

அதுமட்டுமின்றி, இந்த முறை ஐபிஎல் 2022 இதுவரை நடந்த போட்டிகளில் குஜராத் அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதனால் சென்னை அணிக்கு நிச்சியமாக சவாலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

இருப்பினும் நாளை நடைபெற உள்ள போட்டியில் சில மாற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் : ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா போன்ற இருவரும் தொடக்க வீரராக களமிறங்க உள்ளனர். நிச்சியமாக ருதுராஜ் இந்த முறை ரன்களை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டர் : மொயின் அலி, சிவம் துபே , ரவீந்திர ஜடேஜா, தோனி போன்ற வீரர்கள் உள்ளனர். இதில் நிச்சியமாக ஏதாவது இருவர் அசத்தலான பார்ட்னெர்ஷிப் அமைக்க போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. கடந்த போட்டியில் ராபின் மற்றும் ஷிவம் பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமைந்தது.

பவுலர்கள் : ப்ராவோ, கிறிஸ் ஜோர்டான் அல்லது பிரிட்டோரியஸ் , தீக்சஹானா , முகேஷ் அல்லது ராஜேவர்தன் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் முகேஷ் இதுவரை விளையாடிய போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை.

பின்பு, கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக பிரிட்டோரியஸ் இடம்பெற போவதாக தகவகள் வெளியாகியுள்ளது. நிச்சியமாக நாளை நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுமா ?? இல்லையா ?? என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here