இவர் ஒன்னு மட்டும் தான் பரவாயில்லை , மற்ற படி ஒருத்தரும் விளையாடுவது இல்லை ; ரோஹித் சர்மா பேட்டி ;

0

ஐபிஎல் 2022 ; நேற்று மதியம் 3:30 மணியளவில் தொடங்கிய 26வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் கேப்டன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்களை அடித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ். அதில் கே.எல்.ராகுல் 103, டி-காக் 24, மனிஷ் பாண்டே 38, மார்கஸ் ஸ்டோனிஸ் 10, தீபக் ஹூடா 15 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. எப்பவும் போல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டத்தை இஷான் கிஷான், ரோஹித் சர்மா தொடங்கவில்லை என்பது தான் உண்மை. இருவரும் உடனடியாக ஆட்டம் இழந்த நிலையில் மும்பை அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

பின்பு ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்து வந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி வரை போராடி 9 விக்கெட்டை இழந்து 181 ரன்களை அடித்து தோல்வியை சந்தித்தது. அதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது லக்னோ.

இப்பொழுது புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் லக்னோ அணியும், 10வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது. இனிவரும் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற பெற வாய்ப்புகள் உள்ளதா ?? இல்லையா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணத்தை பற்றி பேசிய கேப்டன் ரோஹித் : “போட்டியின் தோல்வி இதுதான் என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பிறகு நிச்சியமாக வலுவான பார்ட்னெர்ஷிப் இருக்க வேண்டும்.”

“அதனை தான் இன்றைய போட்டியில் தவறவிட்டோம். ஆனால் அனைவரும் அவரவர் திறனை வெளிப்படுத்தி விளையாடி உள்ளனர், இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. நானும் முடிந்த வரை பும்ராவை சரியான நேரத்தில் பயன்படுத்தி விக்கெட்டை கைப்பற்ற நினைத்தேன். ஆனால் ஆடு நடக்கவில்லை.”

“பின்பு பேட்டிங் செய்த போது, முதலில் அவர்களுது பவுலிங் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் முதல் இரு விக்கெட்டை இழந்துவிட்டோம், அதில் இருந்து எங்களால் மீண்டு எழுந்து வர முடியவில்லை.”

“இதுதான் எங்கள் அணிக்கான பெஸ்ட் ப்ளேயிங் 11 என்று பல யோசனைகளை செய்த பின்பு தான் அணியை தேர்வு செய்வோம். எனக்கு தெரிந்து கே.எல்.ராகுல் இன்றைய போட்டியை புரிந்து கொண்டு விளையாடினார். அதேபோல, முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் ஏதாவது இரு சிறப்பாக விளையாடிருக்க வேண்டும், அது நடக்கவில்லை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here