மற்ற அணிகளை விட சென்னை அணிக்கு இருக்கும் பலமே ஆல் – ரவுண்டர்கள் தான் ; அதுவும் இவங்க மூன்று பேர் தான் ;

0

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 31) குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 10 அணிகளின் கேப்டன்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல். நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

நாளை (மார்ச் 31) ஐ.பி.எல். முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எத்தனை முறை சாம்பியன் பட்டம் வென்றது உள்ளிட்டவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது. இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகிய மூன்று தலைச்சிறந்த ஆல் ரவுண்டர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக வளம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் கலக்கி வருபவர் ஜடேஜா. கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 210 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, 2,502 ரன்களையும், 132 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த நிலையில், 2021- ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 44 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 910 ரன்களையும், 24 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவர் அதிகபட்சமாக 93 ரன்களை எடுத்துள்ளார்.

அதேபோல், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மற்றொரு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளில் விளையாடி உள்ளார். 43 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 920 ரன்களைக் குவித்துள்ளார். அதிகபட்சமாக 107 ரன்களை எடுத்துள்ளார். மேலும், 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்த மூன்று வீரர்களும் சர்வதேச போட்டிகளில் தங்களது அதிரடியை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த அணியின் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here