ஜடேஜாவின் புதிய பிளான் ; இவங்க இருவரையும் அணியில் வெளியேற்ற போகிறது சென்னை அணி ; ஸ்டீபன் பிளெம்மிங் உறுதுணையா ?

0

ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ளது. இதுவரை மொத்தம் 10 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் சென்னை அணிக்கு தொடக்க சரியில்லை என்பது தான் உண்மை.

ஏனென்றால் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய சென்னை அணி மோசமான தோல்வியை பெற்றுள்ளது தான் உண்மை. சென்னை அணியின் தோல்விக்கு என்ன தான் காரணம் ? ஏனென்றால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 131 ரன்களை தான் அடித்தது.

அதே லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை அடித்துள்ளது சென்னை. இருப்பினும் தோல்வி தான் மிஞ்சியது. அதற்கு முக்கியமான பவுலிங் தான், சென்னை அணியின் நட்சத்திர பவுலர் தீபக் சஹார் அணியில் இல்லாத காரணத்தால் சென்னை அணியின் பவுலிங் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை.

அதுவும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் பவுலிங் மிகவும் மோசமான ஒன்றாக மாறியுள்ளது. அதிலும் முகேஷ் மற்றும் தேஷ்பாண்டே ஆகிய இருவரும் ரன்களை அதிகமாக கொடுத்தனர். அதாவது ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெறும் மூன்று வெளிநாட்டு வீரர்களை வைத்துதான் சென்னை அணி விளையாடியுள்ளது. அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய அணியில் இளம் வீரரான ராஜ்வர்தன் ஹங்காரகேகர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதனால் இனிவரும் போட்டிகளில் முகேஷ் க்கு பதிலாக ராஜ்வர்தன் மற்றும் தேஷ்பாண்டே -க்கு பதிலாக மிச்சேல் சண்ட்னர் அல்லது கிரிஷ் ஜோர்டன் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வருகின்ற 25ஆம் தேதி முதல் தீபக் சஹார் சென்னை அணியில் விளையாட போவதாக தெரிகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை அணியின் தோல்விக்கு என்ன தான் காரணம் ? சென்னை அணியின் பக்காவான ப்ளேயிங் 11 ல் யார் யார் என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here