இவர் இல்லாமல் எங்கள் அணி மோசமான நிலையில் உள்ளது ; கூடிய விரைவில் அணியில் விளையாடுவார் ; ரோஹித் சர்மா ;

0

நேற்று மதியம் நடந்த 9வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் சரமாரியாக ரன்களை அடித்து குவித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 193 ரன்களை அடித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

அதில் ஜோஸ் பட்லர் 100, ஜெய்ஸ்வால் 1, படிக்கல் 7, சாம்சன் 30, ஹெட்மயேர் 35, ரியன் பராக் 5, அஸ்வின் 1 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. இஷான் கிஷான் சிறப்பாக தொடக்க ஏற்படுத்தினாலும்,

பின்னர் ரோஹித் சர்மா , அன்மோல்ப்ரீட் சிங் சரியாக பேட்டிங் செய்யாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 170 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் இஷான் கிஷான் 54, ரோஹித் சர்மா 10, அன்மோல்ப்ரீட் 5, திலக் வர்மா 61, பொல்லார்ட் 22 ரன்களை அடித்துள்ளனர்.

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரு போட்டிகளும் தோல்வியை பெற்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; “எனக்கு தெரிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்துள்ளனர்.”

“அதிலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடினார். அவரது விக்கெட்டை கைப்பற்ற எங்களால் முடிந்த வரை நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. 193 ரன்கள் என்பதால் அதனை சுலபமாக அடித்து விடாமல் என்று தான் நாங்கள் நினைத்தோம்.”

“அதுவும் 7 ஒவரில் 70 ரன்களை அடித்த போதும் வெற்றி பெற்றுவிடலாம் என்று தான் யோசித்தோம். ஆனால் எதிர்பாராத பல விஷயங்கள் நடந்து முடிந்துள்ளது. அதனால் செய்த தவறில் இருந்து நல்ல பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் திலக் மற்றும் இஷான் கிஷான் போன்ற இருவரும் சிறப்பாக விளையாடியுள்ளனர்.”

எனக்கு தெரிந்து ஏதாவது இரு வீரர்கள் பார்ட்னெர்ஷிப் செய்திருந்தால் நிச்சியமாக வெற்றி பெற்றிருக்கலாம். எங்கள் அணியிலும் பட்லர் போன்ற திறமையான பேட்ஸ்மேன் தேவை. சூர்யகுமார் யாதவ் எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமான வீரர். அவர் குணமாகிவிட்டால், நேரடியாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துவிடுவார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் அணியில் இல்லாதது தான் காரணமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழ் உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here