இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். அதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. ஆனால் லிவிங்ஸ்டன் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரன்கள் குவிந்தன. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 180 ரன்களை அடித்துள்ளனர்.
அதில் மயங்க் அகர்வால் 4, தவான் 33, ராஜபக்ச 9, லிவிங்ஸ்டன் 60, ஜீட்டேஷ் சர்மா 26 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி. ஆனால் கடந்த போட்டி போல தொடக்க ஆட்டம் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது சென்னை அணி.
இறுதிவரை போராடிய சென்னை அணி 18 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதில் ராபின் 13, ருதுராஜ் 1, மொயின் 0, அம்பதி ராயுடு 13, ரவீந்திர ஜடேஜா 0, ஷிவம் துபே 57, டோனி 23 ரன்களை அடித்துள்ளனர்.
இன்றைய போட்டியில் புதிதாக கிறிஸ் ஜோர்டான் அணியில் இடம்பெற்றுள்ளார். தோனி மற்றும் கிறிஸ் ஜோர்டன் செய்த ரன் அவுட் இணையத்தை கலக்கி வருகின்றனர். 2வது ஓவர் பவுலிங் செய்த கிறிஸ் ஜோர்டன், அதனை எதிர்கொண்டார் லிவிங்ஸ்டன் மற்றும் ராஜபக்ச ஆகிய இருவரும் பேட்டிங் செய்து வந்தனர்.
Our Captain our Thala our Mahi has still got it in him. What a phenomenal level of athleticism by one and only Mahendra Singh Dhoni. #CSKvPBKS #CSKvsPBKS #mahi #IPL2022 #CSK𓃬
Originial copyright owner: @IPL pic.twitter.com/UUgbxIoebZ— Mohit Pandey (@MohitPa64973338) April 3, 2022
2வது அடித்த ராஜபக்ச ஜோர்டன் கையில் சிக்கியது பந்து, அதனை ஸ்டம்ப் பக்கத்தில் வீசிய போது மகேந்திர சிங் தோனி அதனை பிடித்து ஸ்டம்ப் செய்துள்ளார். அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது….!