தோனி சொன்னதால் தான் சிஎஸ்கே அணி இதை செய்திருக்குமோ..? அப்படி என்ன சொன்னார்? முழு விவரம் ..!

ஐபிஎல் 2021: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். முதல் போட்டியே மும்பை மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் துவக்கத்திலேயே சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டி மும்பை மைத்தனத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோனி அவரது சர்வதேச ஓய்வை அறிவித்திருந்தார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தோனியின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். ஆனால் தோனியை மீண்டும் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பார்க்க முடியும் என்று ரசிகர்கள் மனதை சமாதானம் செய்து கொண்டனர்.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக அமையவில்லை என்று கூட சொல்லலாம். ஏனென்றால் பல போட்டிகளில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் ஐபிஎல் விட்டு வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றில் அதே முதல் முறையாகும்.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே வீரர்களும் சோகத்தில் மூழ்கினார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் மேலே வரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா? சிஎஸ்கே அணி என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021கான ஆடையை எல்ல அணிகளும் புதிதாக மாற்றி சமூகவலைத்தளங்களில் அறிமுகம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி தோனி சொன்னதால் தான் சிஎஸ்கே அணிக்கான ஆடையும் இப்படி செய்திருப்பார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

சிஎஸ்கே அணியின் புதிய ஆடையில் என்ன என்ன இருக்கு தெரியுமா? சமீபத்தில் தோனி சிஎஸ்கே அணியின் ஆடையை தோனி அறிமுகம் செய்வது போல ஒரு விடியோவை வெளியிட்டனர் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்.

இந்த புதிய ஆடையில் இதய பக்கத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியின் முத்திரைக்கு மேல் முன்று ஸ்டார் இருக்கின்றது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஒருவேளை அந்த வெற்றியை சொல்லுகிறது?? அந்த ஸ்டார்.

அதுமட்டுமின்றி தோள்பட்டையில் இருக்கும் ராணுவ உடை மாதிரியான கலர், ராணுவத்தை குறிக்கிறதா. ஏனென்றால் நம்ம தல தோனி சில ராணுவமுகாமில் கலந்துள்ளார். அது நமக்கே தெரிந்த ஒன்று தான். அதனால் சிஎஸ்கே அணியில் அதனை இணைந்திருப்பார்களோ??

அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடை முழுவது தோனியின் பிராண்ட் செவன் (SEVEN) மூலமாகத்தான் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் தோனி ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

இதனை எல்லாம் பார்த்தால் நிச்சியமாக தோனி சொன்னதால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடை இப்படி மாறியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.