நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி அனைத்து விதமான ( டெஸ்ட், டி-20, ஒருநாள் ) ஆகிய மூன்று போட்டிகளிலும் தொடரை வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் 2016ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணி டி-20 போட்டிகளில் தொடரை கைப்பற்றாமல் இருந்ததே இல்லை.
ஆனால் இங்கிலாந்து அணியின் சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணி. அதன்பின்னர் நடந்த ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் பிசிசிஐ , ஐபிஎல் 2021 போட்டிகளில் இனிமேல் சாப்ட் சிக்னல் இல்லை என்று கூறியுள்ளது. கள நடுவரின் முடிவால் பல விக்கெட்டை தேவை இல்லாமல் பரிபோயிருக்கிறது. அதனை தவிர்க்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டில் பல சர்ச்சை ஏற்பட்டது. ஏனென்றால் சூர்யகுமார் அடித்த பந்தை இங்கிலாந்து அணியின் வீரர் அதனை தரையில் விழுந்த படி பந்தை பிடித்தார். அதற்கு கள நடுவர் அவுட் என்று கூறிவிட்டார். அதனை டிவி நடுவர் பார்க்கும்போது தரையில் விழுந்து படி பிடித்தார். அதனை பார்க்கும் நம்மாளுக்கே அவுட் இல்லை என்று தெரியும். இருந்தாலும் கள நடுவரின் முடிவு இறுதியானது என்றதால் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனார்.
அதனை கண்டித்து பல கிரிக்கெட் வீரர்களும் , கிரிக்கெட் விமர்சகர்கள் அதனை விமர்சனம் செய்துள்ளார். இதற்கு விராட் கோலி மிகவும் கண்டித்து, பிசிசிஐ க்கு சாப்ட் சிக்னல் போட்டிகளில் வைக்க வேண்டாம் அதனை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விராட் கோலி. அதனால் விராட் கோலி எடுத்தால் முடிவால் தான் ஐபிஎல் 2021 போட்டிகளில் சாப்ட் சிக்னல் நிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.