சிஎஸ்கே அணி தோல்விக்கு இவரதான் காரணம் ..கடும் கோபத்தில் ரசிகர்கள் …. யார் அந்த வீரர் தெரியுமா ??
ஐபிஎல் 2020யின் 34வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாம் குரான் 0 ரன்களிலும் , வாட்சன் 36 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் களம் இறங்கிய டுபலஸிஸ் அரைசதம் எடுத்து 58 ரன்களிலும் ,தோனி 3 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் ராயுடு 45 ரன்களிலும் ,ஜடேஜா 33 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் 20வது ஓவர் முடிவில் 179 ரன்களை எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
180 எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா 0 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் களம் இறங்கிய ரஹானே 8 ரன்களிலும் ,ஸ்ரேயாஸ் ஐயர் 23ர் ரன்களிலும் , மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரரான தவான் இறுதிவரை நல்ல இரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 20 ஓவர் முழுவதும் விளையாடிய தவான் சதம் அடித்துயுள்ளார். அவரது விளையாட்டு டெல்லி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. அதுமட்டுமின்றி இறுதிவரை போராடிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணி தோல்விக்கு இவர்தான் காரணம் … !! கடும் கோபத்தில் ரசிகர்கள் .. ! மீண்டும் தோல்வியை சந்தித்தது சிஎஸ்கே…
வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் தான் காரணம். அவர் 4 ஓவரில் வெறும் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டை எடுத்துள்ளார். ஆனால் 7வது ஓவரில் தவான் மிகப்பெரிய ஷாட் அடித்தார் அது பவுண்டரி லைனுக்கு உள்ளே விழுந்தது. அதனை பிடிக்க வேண்டிய தீபக் சஹர் அதனை தவற விட்டார் அதனால் தவானை அவுட் செய்வது கடினமாகிவிட்டது அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய பின்விளைவுகளை சந்தித்தது.