கேதர் ஜாதவ் மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம்பெற காரணம் !! தோனி சொன்ன பதில் இதோ….!!

ஐபிஎல் 2020யின் 34வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.

Kedda Jadhav CSK

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாம் குரான் 0 ரன்களிலும் , வாட்சன் 36 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் களம் இறங்கிய டுபலஸிஸ் அரைசதம் எடுத்து 58 ரன்களிலும் ,தோனி 3 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் ராயுடு 45 ரன்களிலும் ,ஜடேஜா 33 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் 20வது ஓவர் முடிவில் 179 ரன்களை எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

180 எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா 0 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் களம் இறங்கிய ரஹானே 8 ரன்களிலும் ,ஸ்ரேயாஸ் ஐயர் 23ர் ரன்களிலும் , மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரரான தவான் இறுதிவரை நல்ல இரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 20 ஓவர் முழுவதும் விளையாடிய தவான் சதம் அடித்துயுள்ளார். அவரது விளையாட்டு டெல்லி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. அதுமட்டுமின்றி இறுதிவரை போராடிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேதர் ஜாதவ் மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம்பெற காரணம் !! தோனி சொன்ன பதில் இதோ….!!

டெல்லிக்கு எதிரான போட்டியில் பியூஸ் சாவ்லாக்கு பதிலாக கேதர் ஜாதவ் இடம்பெற காரணம்…இதோ!!! தோனி சொன்ன பதில்: சென்னை அணி தோல்வியை சந்தித்த போட்டியில் எல்லாம் பேட்டிங் வலுவாக இல்லாதது தான் காரணம். அதனால் அதனை சரி செய்ய பியூஸ் சாவ்லாவுக்கு பதிலாக கேதர் ஜாதவ் இடம்பெற்றுள்ளார். பௌலிங் வலுவாக இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.