இறுதி ஓவர் ஏன் ஜடேஜா வீசினார்….. !! ப்ராவோவுக்கு என்ன ஆச்சு … தோனி சொன்ன பதில்… !!! ரசிகர்கள் சோகம்

0

ஐபிஎல் 2020யின் 34வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாம் குரான் 0 ரன்களிலும் , வாட்சன் 36 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் களம் இறங்கிய டுபலஸிஸ் அரைசதம் எடுத்து 58 ரன்களிலும் ,தோனி 3 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் ராயுடு 45 ரன்களிலும் ,ஜடேஜா 33 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் 20வது ஓவர் முடிவில் 179 ரன்களை எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

180 எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா 0 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் களம் இறங்கிய ரஹானே 8 ரன்களிலும் ,ஸ்ரேயாஸ் ஐயர் 23ர் ரன்களிலும் , மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரரான தவான் இறுதிவரை நல்ல இரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 20 ஓவர் முழுவதும் விளையாடிய தவான் சதம் அடித்துயுள்ளார். அவரது விளையாட்டு டெல்லி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. அதுமட்டுமின்றி இறுதிவரை போராடிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி ஓவர் ஏன் ஜடேஜா வீசினார்….. !! ப்ராவோவுக்கு என்ன ஆச்சு … தோனி சொன்ன உண்மை… !!! ரசிகர்கள் சோகம்

ப்ராவோவுக்கு அடிப்பட்டதால் அவரால் விளையாட முடியவில்லை அதனால் அவருக்கு பதிலாக ருதுராஜ் களம் இறங்கினர். எப்போதும் இறுதி ஓவர் பிராவோ தான் வீச்சுவார் ஆனால் அவருக்கு அடிப்பட்டதால் கரன் சர்மா மற்றும் ஜடேஜா தான் போட வேண்டிய சூழ்நிலை அதனால் நான் ஜடேஜாவை இறுதி ஓவரை முடிக்க செய்தேன் என்று கூறியுள்ளார் தோனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here