ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியின் நிர்வாகம் எடுத்த முடிவை ரசிகர்கள் ஆதரித்து வருகின்றனர் ;

0

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர். பின்னர் இது 20 ஓவர் போட்டி என்ற காரணத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. அதனால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியான்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், டெக்கான் சார்ஜெர்ஸ் , ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற அணிகள் தல ஒரு முறை கோப்பையை வென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து 16வது சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 6 போட்டியில் வெற்றியையும் ஒரு போட்டி ட்ராவில் முடிந்த காரணத்தால் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சென்னை.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

சென்னை அணியை வயதான வீரர்களின் அணி என்று பல ரசிகர்கள் கிண்டல் செய்து வந்துள்ளனர். ஆமாம், தோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பாஜன் சிங், இம்ரான் தாஹிர், வாட்சன், போன்ற வீரர்கள் விளையாடி வந்த நிலையில் மற்ற அணிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் சென்னை அணியில் கிடையாது..!

ஆனால் இந்த ஆண்டு சென்னை ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஏலத்தில் முக்கியமான இளம் வீரர்களை கைப்பற்றியுள்ளது சென்னை. ஆமாம், மதீஷா பாத்திரான, தீக்ஷண, ஆகாஷ் சிங், ராஜேவர்தன் ஹங்காரகேகர், நிஷாந்த் சிந்து, பகத் வர்மா போன்ற இளம் வீரர்களை கைப்பற்றியுள்ளது சென்னை.

இதில் மதீஷா பாத்திரன, தீக்ஷண போன்ற இரு வீரர்கள் நிரந்தரமான இடத்தை கைப்பற்றியுள்ளனர். வயதான வீரர்கள் ஒவ்வொருவரும் ஓய்வை அறிவித்து வரும் நிலையில் சென்னை அணியில் பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டே வருகிறது.

இதனை சென்னை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் மகேந்திர சிங் தோனி எப்பொழுது ஓய்வை அறிவிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் தோனி சொன்ன பதிலை வைத்து பார்த்தால் நிச்சியமாக அடுத்த ஆண்டும் தோனி நிச்சியமாக சிஎஸ்கே அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here