ஐயோ …! ஐபிஎல் போட்டியில் மட்டுமின்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்து ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 52 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

புள்ளிபட்டியலின் விவரம் :

இதுவரை நடந்து முடிந்த போட்டியில் குஜராத் அணி முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளனர். அதுமட்டுமின்றி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் சிறப்பாக விளையாடி வருவதால் புள்ளிபட்டியலில் மாற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஐபிஎல் போட்டியில் மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இருந்து வெளியேறிய வீரர் :

ஐபிஎல் போட்டி நிறைவு பெற்ற பிறகு உலக டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 7ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க போகும் இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மண் கில், புஜாரா, விராட்கோலி, ரஹானே, கே.எல்.ராகுல், பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்டுல் தாகூர், முகமத் ஷமி, முகமத் சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனட்கட் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இறுதி போட்டி, அதுவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி என்ற காரணத்தால் நிச்சியமாக கடுமையான போட்டியாக தான் இருக்கும். அதனால் இரு அணிகளும் தீவிரமான ஆலோசனையில் இருக்கின்றனர். இதற்கிடையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி அவருக்கு காலில் அறுவை சிகிச்சை எடுக்க வேண்டும் என்றதால் மீதமுள்ள ஐபிஎல் போட்டியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் கே.எல்.ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்வதில் பிசிசிஐ ஆலோசனை செய்து வருகின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடி வரும் கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக தான் இருந்தது. இருப்பினும் இந்த முறை ரஹானே போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றதால் இந்திய அணிக்கு சாதகமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.எல்.ராகுலுக்கு பதிலாக யார் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.. !