தோனி இல்லை ; இனிமேல் இவர் இல்லாமல் சென்னை அணி கிடையாது ; CSK அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இவர் தான் ;

0

ஐபிஎல் 2023 : கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்கியது ஐபிஎல் 2023 போட்டிகள். அதில் இருந்து இதுவரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 போட்டியில் வென்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் பவுலிங் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், பேட்டிங்-ல் பட்டைய கிளப்பி விளையாடியது சென்னை அணி.

அதிலும் ருதுராஜ், டேவன் கான்வே, ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ராயுடு, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக ரன்களை அடித்து வருகின்றனர். இருப்பினும் கடந்த இரு போட்டிகளில் சென்னை அணியிக்கு பவுலிங் வலுவாக மாறிக்கொண்டே வருகிறது.

ஆமாம், காயத்தில் இருந்து திரும்பியுள்ளார் தீபக் சஹார். அதுமட்டுமின்றி, இளம் வீரரான பாத்திரன சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். 7 போட்டிகளில் விளையாடிய மதீஷா பாத்திரான 10 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியின் டெத் பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இறுதி ஓவரில் 20 ரன்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் பாத்திரன பவுலிங் செய்தால் நிச்சியமாக வெல்வது கடினம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு முறையும் தோனி அவருக்கு ஆலோசனை கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி, இனிவரும் போட்டிகளிலும் சென்னை அணியின் நிரந்திரமான ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நாளை மறுநாள் 7:30 மணியளவில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

சென்னை அணிக்கு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதா ?

கடந்த ஆண்டு சென்னை அணிக்கு மோசமான ஆண்டாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கு மாறாக இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர். இருப்பினும் சென்னை அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மிதமுள்ளது. அதில் சென்னை அணி குறைந்தது 2 போட்டிகளில் வென்றால் தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு 100 சதவீதம் தகுதி பெரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறதா ?? இல்லையா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here