ஜடேஜாவிற்கு பதிலாக இரு வீரர்களை குறிவைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ; குஷியில் இருக்கும் CSK ரசிகர்கள் ;

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து இதுவரை ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆண்டுகள் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் சிறப்பாக சென்னை அணியின் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 40 வயதான தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக மாறியது. இருந்தாலும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் ஆவது சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் அவரவர் மனதை சமாதானம் செய்து வருகின்றனர். ஆனால் அதுவும் இப்பொழுது சிக்கல் தான் என்றால் 40 வயதான தோனி வருகின்ற ஐபிஎல் 2023ஆம் ஆண்டு பிறகு அனைத்து விதமான தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி பாரத்தால் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் ? கடந்த ஐபிஎல் 2022யின் தொடக்கத்தில் ரவீந்திர ஜடேஜா தான் கேப்டன் என்று சென்னை அணி அறிவித்தது. ஆனால் சென்னை அணி மோசமான நிலையில் இருந்து காரணத்தால் அவருக்கு பதிலாக மீண்டும் தோனியை கேப்டனாக அறிவித்தது சென்னை அணி.

ஆனால் , இப்பொழுது ஜடேஜா மீண்டும் சென்னை அணியில் விளையாடுவாரா ? இல்லையா ? கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆமாம், கடந்த ஐபிஎல் 2022யில் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் 10 ஆண்டுகள் விளையாடி உள்ளனர். அதனை பாராட்டும் வகையில் அதற்கு ஒரு புகைப்படத்தை பகிர்ந்தனர்.

அதற்கு பதிலளித்த ஜடேஜா, இன்னும் 10 ஆண்டுகள் இருப்பேன் என்று பதிவு செய்தார். ஆனால் இப்பொழுது அதனை டெலீட் செய்தது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் விலகி விடுவாரா ?? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜா ஏலத்தில் பங்கேற்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஷர்டுல் தாகூர் மற்றும் அக்சர் பட்டேல் போன்ற இரு வீரர்களை அணியில் இருந்து வெளியேற்ற போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக மீண்டும் ஷர்டுல் தாகூர் மற்றும் ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்ற போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் விளையாட வேண்டுமா ? இல்லையா ? அவருக்கு பதிலாக யார் CSK அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?