இவர் இந்திய அணிக்காக விளையாடியது போதும் ; இனி ஓய்வு எடுத்துக்கலாம் ; ஷோயிப் அக்தர் பேட்டி ;

0

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷோயிப் அக்தர் இந்திய அணியின் முக்கியமான வீரரை டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் கம்பேக் கொடுத்த முன்னாள் கேப்டன் :

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி பேசும் பொருளாக மாறியுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி தீரில் வெற்றியை கைப்பற்றி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. அதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

அதனால் இந்திய அணிக்கு பின்னடைவானது. அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி வாய்ப்பு சதவீதம் குறைந்து காணப்பட்டது. இருந்தாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட்கோலி மற்றும் ஹர்டிக் பண்டியாவின் பங்களிப்பு தான் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது. அதிலும் விராட்கோலி 2வது ஓவரில் இருந்து 20வது ஓவர் வரை விராட்கோலி சிறப்பாக விளையாடியுள்ளார்.

அதில் 82* ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார் கோலி. நீண்ட இடைவெளிக்கு பிறகு விராட்கோலியின் கம்பேக் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது தான் உண்மை. 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு பிறகு இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்துள்ளார் விராட்கோலி.

அதனால் இந்தியா அணியின் மிடில் ஆர்டர் சற்று வலுவாக காணப்படுகிறது. ஆனால் இதற்கிடையில், பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர் , இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட்கோலி டி-20 போட்டிகளில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய அக்தர் கூறுகையில் : “என்னை பொறுத்தவரை விராட்கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போட்டிதான் மிகவும் முக்கியமான இன்னிங்ஸ். அவரால் முடியும் என்று விராட்கோலி நினைத்தால் தான் ரன்களை அடித்தார்.”

“கடந்த மூன்று ஆண்டுகளாக பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை விராட்கோலி. அதனால் கேப்டன் பதவியில் இருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலி விளையாடிய ஆட்டத்தில் தீபாவளி பட்டாசு போல அதிரடியாக விளையாடினார்.”

“அவரது கம்பேக் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்திய அணிக்கு கிங் கம்பேக் கொடுத்துள்ளார். விராட்கோலி மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் தான். எனக்கு அதில் மிக்கமகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, எனக்கு விராட்கோலி டி-20 போட்டிகளில் இருந்து விலக வேண்டும். ஏனென்றால் அவரது முழு பங்களிப்பையும் டி-20 போட்டிக்கு மட்டும் கொடுக்க வேண்டாம்.”

“பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது போல விளையாடினால் நிச்சியமாக ஒருநாள் போட்டியில் மூன்று சதம் ஒரே போட்டியில் அடிக்க முடியும் என்று கூறியுள்ளார் ஷோயிப் அக்தர்.”

இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ள விராட்கோலி டி-20 போட்டிகளில் இருந்து விலக வேண்டுமா ?? அப்படி விலகினால் மாற்று வீரர் யாராக இருக்க முடியும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here