ஐயோ ..! நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாத விரக்தியில் ப்ரித்வி ஷா செய்த பதிவு வைரலாக பரவி வருகிறது ;

டி-20 உலகக்கோப்பை : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கி வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு எந்த பஞ்சமும் இருக்காது.

இந்திய அணியின் நிலைமை :

எப்பொழுதும் உலகக்கோப்பை, ஆசிய போன்ற பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் இந்திய அணியின் பங்களிப்பு சொல்லும் அளவிற்கு இருக்காது. ஆனால் இந்த முறை ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதல் இரு போட்டிகளில் வென்ற நிலையில் தென்னாபிரிக்கா அணியுடன் மோசமான நிலையில் தோல்வியை கைப்பற்றியுள்ளனர்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இன்னும் நடைபெற உள்ள இரு போட்டிகளில் வென்றால் தான் முதல் இரு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை கைப்பற்ற முடியும். இல்லாவிட்டால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் :

டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் நடந்து முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து-க்கு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட போகின்றனர். அதற்கான வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது பிசிசிஐ.

டி-20 போட்டிக்கான அணியின் விவரம் :

ஹர்டிக் பாண்டிய (கேப்டன்), ரிஷாப் பண்ட் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷதீப் சிங், ஹர்ஷல் பட்டேல், முகமத் சிராஜ், புவனேஸ்வர் குமார், உம்ரன் மாலிக்.

ஒருநாள் போட்டிக்கான அணியின் விவரம் :

ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷாப் பண்ட், சுப்மன் கில்,தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்டுல் தாகூர், ஷ்ஹபஸ் அகமத், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷதீப் சிங், தீபக் சஹார், குல்தீப் சென், உம்ரன் மாலிக்.

பிருத்வி ஷாவின் வருத்தம் :

22வயதான பிருத்வி ஷாவ் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, இந்திய அணியிலும் அவ்வப்போது இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 339 ரன்களையும், 6 ஒருநாள் போட்டியில் 189 ரன்களையும் மட்டுமே அடித்துள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க போகும் வீரர்களின் பட்டியலில் பிருத்வி ஷாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனை பார்த்த உடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் நீங்க பாக்குறீங்க என்று நான் நினைக்கிறன்” என்று பதிவு செய்திருந்தார். அதனை கிரிக்கெட் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து பதிவு செய்தது வைரலானது.

இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று கேட்டால் அது சந்தேகம் தான். ஏனென்றால் ரோஹித் சர்மா, விராட்கோலி, கே.எல்.ராகுல் போன்ற முன்னணி வீரர்களில் பங்களிப்பு இந்திய அணியில் இருப்பதால் இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.