ஐபிஎல் : மூன்று முக்கியமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் தவிக்க போகும் சென்னை அணி ;

0

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். அதில் இருந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்ற காரணத்தால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் டி-20 தொடர். இதுவரை வெற்றிகரமாக 16 ஆண்டுகள் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் மகேந்திர சிங் தோனி. 40 வயதான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்துள்ளார். அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி, சென்னை அணியில் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கொடுத்தது, சென்னை ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆமாம், இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்களை காட்டிலும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களுக்கு தான் அதிகப்படியான வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இருப்பினும் இந்த ஆண்டு ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்று வலுவாக காணப்படுகிறது. அணியில் எத்தனை திறமையான வீரர்கள் இடம்பெற்றாலும், 11 பேர் மட்டுமே அணியில் விளையாட வைக்க முடியும். அதனால்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கியமான மூன்று வீரர்களுக்கு ப்ளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு மிகவும் குறைவு தான்.

ஐபிஎல் விதிப்படி ஒரு அணியில் அதிகபட்சமாக நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அப்படி பார்த்தால் இந்த ஆண்டு 16.25 கோடி விலை கொடுத்து வாங்கிய பென் ஸ்டோக்ஸ், தொடக்க வீரரான டேவன் கான்வே, ஆல் – ரவுண்டர் மொயின் அலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரிட்டோரியஸ் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் மஹீஸ் தீக்ஷண, மதீஷா பதிரான, மிச்சேல் சான்டனர் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெறுவது சிரமம் தான். அதுமட்டுமின்றி, இந்திய வீரர்களில் நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி , ரஹானே போன்ற வீரர்களுக்கு ப்ளேயிங் 11ல் விளையாடுவது சிரமம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here