நான் சொல்வதை கொஞ்சம் ஆச்சு கேளுங்க ; இதுதான் கிரிக்கெட் விளையாட்டு ; தோனி ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி. தோனி கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

பின்னர் 2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பாக அணியை வழிநடத்தி வந்தார். இதுவரை தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டும் தான் டி-20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன் கோப்பை போன்ற கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், இன்னும் ஐபிஎல் டி-20 லீக் தொடரில் மட்டும் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் தோனி. அதுவும் வருகின்ற ஐபிஎல் 2023 ஆண்டு தான் இறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்பொழுதும் தோனி தலைமையிலான அணியில் விளையாட வேண்டுமென்று அனைத்து வீரர்களும் நினைப்பது வழக்கம். அதுமட்டுமின்றி, எந்த நேரத்திலும் கோவப்படாமல் நிதானமாக விளையாடி போட்டியை வெல்வது தான் தோனியின் முக்கியத்துவம். சமீபத்தில் கூட இளம் வீரர்கள் எப்படி விளையாட வேண்டுமென்று அறிவுரை கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.

அதில் ” நான் எப்பொழுதும் சக வீரர்களுடன் பேசும்போது கிரிக்கெட் விளையாட்டின் முக்கியத்துவத்தை மட்டுமே பேசுவோம். ஏனென்றால் கிரிக்கெட் மற்ற விஷயங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்ளும். நான் விளையாட தொடங்கிய 2004ஆம் ஆண்டில் ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் போன்ற விஷயங்கள் கிடையாது. ஆனால் இப்பொழுது சில கிரிக்கெட் வீரர்கள் லைக், போன்ற விஷயங்களுக்கு கவனம் செலுத்தி வருகின்றனர்.”

“ஆனால் அது முக்கியமான ஒன்று கிடையாது, ஒரு கிரிக்கெட் வீரராக முடிந்த வரை போட்டிகளில் விளையாட வேண்டும், அதுவும் இந்தியாவுக்காக. இதை மட்டும் சரியாக செய்துவிட்டால் போதும் மற்ற விஷயங்கள் அனைத்தும் அதுவாகவே நடக்க ஆரம்பித்துவிடும் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here