கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் வீரர்களுக்கு முன்னோடியாக திகழும் நடராஜன் ; அசத்திய நடராஜன் ;

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் தமிழக வீரரான நடராஜன் அவரது கனவை நிறைவேற்றியுள்ளார். அப்படி என்ன செய்தார் நடராஜன் ? விவரம் இதோ ;

சேலம் மாவட்டத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த நடராஜன் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி கைப்பற்றியது. பின்பு 2020ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடி யாக்கர் பவுலிங் செய்து அசத்தினார். அதனால் யாக்கர் மன்னன் என்று ரசிகர்கள் அன்போடு அழைத்தனர்.

அதன்பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திய நடராஜன் அவரது திறமையை வெளிப்படுத்தினார். பின்பு காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். ஆனால் ஐபிஎல் 2023 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாட தயாராக இருக்கிறார் நடராஜன் ..!

சமீபத்தில் நடராஜன் வெளியிட்ட வீடியோவில் ; “நான் எப்படியாவது ஒரு கிரிக்கெட் அகாடெமி ஆரம்பிக்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைத்து கொண்டு இருந்தேன். அதற்கு முக்கியமான காரணம் என்னை போல பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருகின்றனர். அதனால் யோசனை செய்து அவர்களாவது (இளைஞர்கள்) சாதிக்க வேண்டுமென்ற காரணத்தால் ஒரு அகாடெமி ஆரம்பித்துள்ளேன்.”

அதன்பின்னர் என்னுடைய வாழ்நாள் கனவான , கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க ஆசைபட்டேன். இப்பொழுது அதுவும் நடந்து முடிந்துள்ளது. என்னுடைய கிரவுண்டில் 4 மெயின் பிட்ச், 2 பயிற்சி பிட்ச் இருக்கிறது. முன்பு சாதாரணமாக இருந்த கிரவுண்டில் இப்பொழுது டர்ப் மற்றும் மேட் பிட்ச் ஆகிய விஷயங்கள் இருக்கிறது. கிரவுண்டை உருவாக்க வேண்டுமென்று நினைத்தேன். அது இப்பொழுது நடந்து முடிந்துள்ளது என்று கூறியுள்ளார் நடராஜன்.”

மனிதனாக இருக்கும் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசை நிச்சியமாக இருக்கும். அதேபோல தான் இந்திய அணியின் வீரரான நடராஜன் அவரது கனவை நிறைவேற்றியுள்ளார். யாக்கர் கிங் என்று அழைக்கப்படும் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களாகவே இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைப்பது இல்லை. அவருக்கு காயம் ஏற்படுவது தான் காரணம் ஆ? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா ?

உங்கள் கருத்து என்ன ? என்பதை பதிவு செய்யுங்கள் ?