இப்படி செய்தால் இந்திய கிரிக்கெட் முற்றிலுமாக அழிந்துவிடும் ; அதனை கண்டிப்பாக செய்யமாட்டோம் ; ராகுல் டிராவிட் ஓபன் டாக் ;

0

நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி பெற்றதால் இந்திய அணியின் உலகக்கோப்பையை வெல்லும் கவனவு வீணாக போய்விட்டது.

போட்டியின் சுருக்கம் :

நேற்று மதியம் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஆனால் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 168 ரன்களை அடித்தனர். பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் ஆகிய இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் பவுலர்களால் விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை. 16 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை கூட இழக்காத நிலையில் 170 ரன்களை அடித்தனர். அதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

இந்திய அணி-க்கு இருந்த முக்கியமான நம்பிக்கை:

சமீப காலமாகவே சீரியஸ் தொடரில் அதிரடியாக விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி நிச்சியமாக உலகக்கோப்பையை வெல்லும் அளவிற்கு திறமை உள்ளது என்று தான் பலர் நினைத்து கொண்டு இருந்தனர். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பதும் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக தான் பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு எதிர்மாறாக நடைபெற்று முடிந்துள்ளது. ஏனென்றால், இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம், பவுலிங் போன்ற விஷயங்களில் வீக் ஆக இருக்கிறது இந்திய. அதுமட்டுமின்றி, மற்ற நாடுகளில் விளையாடும் வீரர்கள் இங்கு ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடி சிறந்த அனுபவத்தை பெற்று வருகின்றனர். ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் மற்ற நாடுகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று கூறியுள்ளனர். அதனால் தான் இந்திய அணி தொடர்ந்து உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் மோசமான நிலையில் வெளியேறி வருவதாக பலர் கூறியுள்ளனர்.

ராகுல் டிராவிட் பேட்டி :

“ஆமாம், இங்கிலாந்து வீரர்களில் பலர் இங்கு (இந்திய) வந்து பல போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் அவர்களை போல இந்திய கிரிக்கெட் வீரர்களும் மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளில் விளையாட முடியாது. ஏனென்றால், இங்கையே பல போட்டிகள் அவ்வப்போது நடைபெற்று கொண்டு வருகிறது. அது தான் எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. அதனால் தான் எங்கள் வீரர்கள் யாரும் மற்ற போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விடுகிறது. அதுவும் பிசிசிஐ கையில் தான் இருக்கிறது.”

“ஒருவேளை இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க சென்றால், நிச்சியமாக நம் நாட்டில் உள்ளூர் விளையாட்டான (ரஞ்சி கோப்பை, டெஸ்ட்) போன்ற போட்டிகளுக்கு ஆபத்தாக மாறிவிடும். அதுமட்டுமின்றி, பலர் மற்ற நாடுகளில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டுமென்று கூறி வருகின்றனர். ஆனால் அப்படி இடையில் வீரர்களை அனுப்பினால், இந்திய அணியின் நிலைமை என்ன ஆவது ? இப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி எந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலைமை இந்திய அணிக்கு வரக்கூடாது. அதுமட்டுமின்றி, அப்படி சென்றால் டெஸ்ட் போட்டியான ரஞ்சி கோப்பை முற்றிலுமாக அழிந்துவிடும் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here