பிராவோவிற்கு பதிலாக CSK அணி குறிவைத்த ஆல் – ரவுண்டர் இவர் தான் ; CSK ரசிகர்கள் சந்தோசம் ;

0

ஐபிஎல் 2023 : ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்த நிலையில் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் மிகவும் பிரபலமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. அதற்கு முக்கியமான காரணம் அதன் கேப்டனான மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து இதுவரை தோனி தான் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். இதுவரை 15 சீசன்களின் மொத்தம் 4 முறை தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பையை வென்றுள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில முக்கியமான வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அதில் ப்ராவோ, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ஜெகதீசன் போன்ற வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதில் ஆல் – ரவுண்டரான ப்ராவோ வெளியேற்றப்பட்ட காரணத்தால் ஓய்வை அறிவித்தது மட்டுமின்றி, இப்பொழுது சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளராக பணியாற்ற போகிறார்.

பிராவோ இடத்திற்கு யாரை தேர்வு செய்ய போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டராக திகழும் ப்ராவோ 2011 முதல் 2015வரையும், 2018 முதல் 2022வரையும் விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ள மினி ஏலத்தில் இங்கிலாந்து வீரரான சாம் கரன் இடம்பெற இருக்கிறார். அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோவிற்கு பதிலாக சாம் கரணை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம் கரன் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கின்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி மோசமான நிலையில் இருந்த போது சாம் கரனின் பங்களிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. பின்பு கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நான் விளையாட போவதில்லை என்று கூறினார் சாம் கரன். ஒரு ஆண்டு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போகிறார். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 போட்டியிலும் சிறப்பாக விளையாடியதால் சாம் கரணை கைப்பற்ற பல அணிகள் போட்டிபோடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகின்ற மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை தேர்வு செய்ய வேண்டுமென்று நினைக்குறீங்க ? உங்கள் கருத்து ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here