இதனை மட்டும் இந்திய கிரிக்கெட் அணி செய்தால் போதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும் ; ஆனால்..!

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றுள்ளது இந்திய.

அதுமட்டுமின்றி, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி பெற்றதால் இந்திய அணிக்கு டாப் இடத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியால் கடந்த முறை போலவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற முடியுமா ? இல்லையா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுவரை நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டிகளில் அடிப்படையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முதல் 120 புள்ளிகளை பெற்ற நிலையில் முதல் இடத்திலும், 87 புள்ளிகளை பெற்ற நிலையில் இரண்டாவது இடத்திலும் இருகிறது இந்திய. ஆனால் மூன்றாவது இடத்தில் தென்னாபிரிக்கா அணி 72 புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இப்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது.

அதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி தோல்வி பெற வேண்டும். அதே சமையத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட போகின்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் அனைத்திலும் வெற்றிபெற வேண்டிய சூழலுக்கு இந்திய அணி தள்ளப்படலாம்.

அதனால் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். என்ன செய்ய போகிறது இந்திய ?

இந்திய அணியின் மோசமான நிலை :

மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த நேரத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான உலககோப்பைகளையும் வென்றுள்ளனர். அதன்பின்னர்,விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியால் கோப்பையை வெல்ல முடிவதில்லை. அது ஏன்.. சமீபத்தில் நடந்த முடிந்த ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிக்கான தொடரில் கூட இந்திய கிரிக்கெட் அணியால் அரையிறுதி போட்டிவரைக்கு தான் முன்னேற முடிந்தது.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை முன்னேறியது விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அதில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வி பெற்று கோப்பையை வெல்ல முடியாத நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுமா ?